குடும்பத்தை தூக்கிப் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறார் கோபி.

Baakiyalakshmi Episode Update 23.11.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. ராதிகா வீட்டுக்கு போன கோபி தன்னுடைய அப்பா மொத்த சொத்தையும் தனது மனைவி பெயரில் எழுதி வைத்து விட்டதாக கூறுகிறார். இந்த குடும்பத்துக்காகவும் குடும்பத்தில் உள்ள மொத்த பேருக்காகவும் ஒத்த ஆளாக நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் எனக்காக என்னுடைய குடும்பம் ஒன்றாக சேர்ந்து செய்த வேலையை பார். என்னுடைய பிள்ளைகள் கூட வளர்ந்துட்டாங்க. அவங்களுக்கு கூட நான் தேவையில்லாத ஆளாக மாறிட்டேன். என் பொண்ணோட ஃப்யூச்சர் நெனச்சாத்தான் கஷ்டமா இருக்கு என கதை கதையாக அளந்து விடுகிறார்.

சென்னையில் வெள்ளப் பாதிப்புகள் : மத்தியக் குழுவினர் நேரில் பார்வை..

குடும்பத்தை தூக்கிப் போட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும் கோபி.. பாக்கியா செய்த செயல் - பாக்கியலட்சுமி இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்

அது மட்டுமல்லாமல் தன்னுடைய மனைவி ஒரு அப்பாவி முகத்தை வைத்துக்கொண்டு வீட்டில் உள்ள எல்லோரையும் ஏமாற்றி காரியத்தை சாதித்து விடுவார். இந்த வீட்டின் மீது இஎம்ஐ இன்னும் நான்கு வருஷம் கட்ட வேண்டியது இருக்கு. அதைக் கட்டி முடித்ததும் அதையும் அவருடைய பெயருக்கு மாற்றிக் கொண்டு என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பி விடுவாள். இப்போ எல்லாம் அந்த வீட்டில் இருக்கவே பிடிக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் வீட்டை விட்டு வெளியே வந்து விடுவேன். எங்க அப்பாவோட சொத்தையோ பணத்தையோ நான் எதிர்பார்க்கல. ஆனா அவர் எனக்கு ஒரு பங்குகூட கொடுக்கலைன்னு நினைக்கும் போது மனசு கஷ்டமா இருக்கு என கூறி வருகிறார்.

சம்பளம் வேணாம் நடிக்கிறேன் சொன்னேன் – Actor Ameer Funny Speech 

கோபி சொல்வதெல்லாம் உண்மை என நம்பும் ராதிகா அவரது கையைப் பிடித்துக் கொண்டு ஆறுதல் கூறுகிறார். இந்தப் பக்கம் பாக்கியா மாமா ஏன் இப்படி செய்தார் என்ற யோசனையில் அமர்ந்து கொண்டு இருக்கிறார். செல்வி ஐயாவுக்கு உடம்பு ஏதாவது சரி இல்லாமல் இருக்குமா? அதனால தான் இப்படி செய்தாரா என கூறுகிறார். இவர்கள் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் கோபியின் மாமனார் வந்து அமர அவரிடம் ஏன் மாமா இப்படி செஞ்சீங்க? உங்க உடம்புக்கு ஒண்ணும் பிரச்சனை இல்லையே என கேட்கிறார்.

குடும்பத்தை தூக்கிப் போட்டு வீட்டை விட்டு வெளியே செல்லும் கோபி.. பாக்கியா செய்த செயல் - பாக்கியலட்சுமி இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்

அதற்கு அவர் என்னுடைய உடம்புக்கு ஒரு பிரச்சனையும் இல்லை. நான் நல்லா குத்து கல்லு மாதிரி தான் இருக்கேன். ஊரில் இருக்கும் சாமி சத்தியமா எனக்கு எதுவும் இல்லை என கூறுகிறார். என் மாமா அவர் மேல எதுவுமே எழுதி வைக்கல அப்படி என்ன உங்களுக்கு கோபம் என கேட்கிறார். அவ மேல 1008 கோபம் இருக்கு. அவன் உன்னை நடத்துகிற விதம் எனக்கு புடிக்கல. அன்னைக்கு பணத்தை தொலைச்ச போது என்னைக் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி என்பதே முடிவு பண்ணிட்டேன் அவனுக்கு என்னோடு சொத்துல சல்லிக்காசு கிடையாதுன்னு. உடனே செல்வி ஐயாவுக்கு நீ அத்தையை நல்லா பாத்துப்பேன் தெரியும். கோபி சாரையும் விட்டுக் கொடுக்க மாட்டேன் அதனால தான் உன் பேர்ல எழுதி வைத்திருக்கிறார் என கூறுகிறார்.

பிறகு கிச்சனில் அமர்ந்து பாக்கியா செல்வி மற்றும் ஜெனி ஆகியோர் தீபாவளி பலகாரம் செய்வதற்காக லிஸ்ட் போட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்த நேரத்தில் அவருடைய மாமனார் வந்து என்ன செய்கிறீர்கள் என கேட்க பாக்கியா தனக்கு 25 க்கும் மேல் ஆர்டர் கிடைத்து இருப்பதாக கூறுகிறார். பிறகு ஜெனி நமக்குன்னு தனியா ஒரு இடம் பார்த்ததெல்லாம் அங்க சமைக்கலாம் என சொல்கிறார். பாக்கியா மாமனாரும் இது நல்ல ஐடியாவா இருக்கு தீபாவளி முடியட்டும் நானே நல்ல இடமா பக்கத்திலேயே பார்க்கிறேன் என கூறுகிறார். மீண்டும் பாக்கியா மாமாவிடம் இதுகுறித்து கேட்க அவர் இதைப் பற்றி பேச வேண்டாம் என சொல்லி விடுகிறார்.

பின்னர் பாக்யா வீட்டிலுள்ள அனைவர்களுக்கும் தீபாவளிக்கு புது டிரஸ் வாங்கி வந்து கொடுக்கிறார். துணியை வாங்கிய ஈஸ்வரி கோபி பணம் கொடுத்துட்டானா என கேட்கிறார். இது என்னுடைய சொந்த காசுல வாங்குவது என சொல்லி மகிழ்ச்சி கொள்கிறார். எல்லோருக்கும் தான் வாங்கிய புது டிரசை கொடுத்து எப்படி இருக்கு என கேட்டு மகிழ்ச்சி கொள்கிறார். இனியா அப்பாவும் டிரஸ் எடுத்துக் கொடுப்பார்ல என கேட்க அப்பாக்கு ஏற்கனவே பிசினஸ்ல 1008 பிரச்சனை. இன்னும் அவர் வேற எடுத்து தரணுமா எனவே இத்துடன் முடிகிறது பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

இதனைத் தொடர்ந்து வெளியான புரோமோ வீடியோவில் கோபி ராதிகா மற்றும் மயூ ஆகியோருக்கு தீபாவளிக்கு புது துணி எடுத்துக்கொண்டு கொடுக்கிறார்.