பாக்யா பற்றி பேசி ராதிகாவுடன் சிக்கி உள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் ஆபீஸில் வேலை பார்த்துக் கொண்டிருக்க அப்போது அங்கு வரும் வர்ஷினி எழிலை பார்த்தபடி உட்கார போன் அடிக்கும்போதெல்லாம் எழில் அமிர்தாவாக இருக்கும் என ஆர்வத்தில் எடுத்துப் பார்க்க அதை கவனிக்கும் வர்ஷினி அமுதா திரும்ப வர மாட்டாங்க பாதியில் வந்தவங்க பாதியில போய்ட்டாங்க என சொல்கிறார்.

பாக்கியா பற்றி பேசி ராதிகாவிடம் சிக்கிய கோபி.. எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

மேலும் இவர்களிடம் வேண்டுமென்றால் நீங்கள் பாருங்கள் உங்களுக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும் என சொல்ல எழில் இப்படி எல்லாம் பேசாதீங்க எனக்கு ஒர்க் பண்ற மூடே போகுது என சொல்ல என்ன வேணாலும் நடக்கட்டும் ஆனா உங்களுக்கும் எனக்கும் தான் கல்யாணம் நடக்கும் என வர்ஷினி சொல்கிறார். சதீஷ் அமுதா பேசாம இருக்க காரணம் வர்ஷினியா இருக்குமோனு எனக்கு என்னவோ தோணுது என சொல்ல எழிலுக்கும் சந்தேகம் வருகிறது.

அடுத்து எழில் அமிர்தா வீட்டுக்கு வர அமுதாவின் அப்பாவும் அம்மாவும் எழிலை திட்டி கோபமாக பேசி வீட்டை விட்டு வெளியே அனுப்புகின்றனர். இனிமே உங்க வீட்ல இருக்கவங்க வந்து பேசினாலும் இந்த கல்யாணம் நடக்காது நீங்க வரமாட்டா நாங்களும் ஊருக்கு கிளம்பி போயிடுவோம் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கின்றனர்.

பாக்கியா பற்றி பேசி ராதிகாவிடம் சிக்கிய கோபி.. எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அடுத்து கோபி ராதிகாவுடன் காரில் வந்து கொண்டிருக்கும் போது ரெஸ்டாரண்டில் பாக்கியா ஒருவருடன் சிரித்து பேசி கொண்டிருந்த விஷயத்தை கோபமாக சொல்ல ராதிகா பாக்யா யாரோட பேசினா உங்களுக்கு என்ன உங்களுக்கும் உங்களுக்கும் இப்போ என்ன சம்பந்தம் நீங்க எதுக்கு இப்படி பீல் பண்ணிட்டு இருக்கீங்க என்ன அவங்க மேல இன்னும் அக்கறை இருக்கா என கேட்க கோபி சிக்கி கொள்கிறார்.

அடுத்து வீட்டுக்கு வரும் எழில் பாக்யாவை கட்டிப்பிடித்து அழுது அமிர்தாவின் நடந்த விஷயங்களை சொல்ல பாக்கியா நான் அமிர்தா கிட்ட பேசி பார்க்கிறேன் என அவருக்கு போன் போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.