கோபியும் இனியாவும் சேர்ந்து கொண்டு ராதிகாவை கடுப்பாக்க அவர் பாக்கியாவை பழி தீர்க்க முடிவு செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராமமூர்த்தி பாக்யாவை ஏமாத்தி விவாகரத்து பேப்பரில் கையெழுத்து வாங்கிய விஷயம் உட்பட எல்லாவற்றையும் சொல்ல பழனிச்சாமி பரிதாபப்படுகிறார்.

அதன் பிறகு கிச்சனுக்கு வரும் பழனிச்சாமி பாக்யாவிடம் எப்படி உங்களால இவ்வளவு தைரியமா இருக்க முடியுது உங்கள பத்தி நடந்த விஷயங்கள் எல்லாத்தையும் அப்பா அம்மா சொன்னாங்க என சொல்லி பாக்யாவின் தன்னம்பிக்கையை பாராட்டுகிறார்.

பிறகு பாக்கியா ஸ்வீட் செய்து கொடுக்க அதை பழனிச்சாமி ஆகா ஓகோ என பாராட்ட அந்த சமயம் அந்த வழியாக வரும் கோபி இருவரும் கிச்சனில் சிரித்து பேசிக் கொண்டிருப்பதை பார்த்து டென்ஷன் ஆகிறார். இவர்களை எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும் என உள்ளே வர முயற்சி செய்ய பிறகு எழில் மற்றும் செழியன் இருவரும் வாயை உடைப்பேன் என எச்சரித்ததை நினைத்து எதுவும் பேச முடியாமல் சென்று விடுகிறார்.

அதற்கு அடுத்ததாக இனியா கிச்சனில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்க அங்கு வரும் கோபி வீட்டுக்கு வந்த கெஸ்ட் போய்ட்டாங்களா என பழனிச்சாமி பற்றி விசாரிக்க இனியா அவர் அப்பவே கிளம்பிட்டாரு என சொல்கிறார். பிறகு கோபி ஏன் இங்க உக்காந்துட்டு படிச்சிட்டு இருக்க ரூம்ல படிக்க வேண்டியதுதானே என கேட்க இனியா எனக்குத்தான் ரூம் இல்லையே என பதில் சொல்ல கோபி உன் ரூம்ல தான் நாங்க தங்கிட்டு இருக்கோம்ல சாரி என்று கூறுகிறார்.

அதன் பிறகு கோபி சரி வா ரூம்ல வந்து படி என்று கூப்பிட அவங்க இருப்பாங்க நான் எப்படி வர முடியும் என சொல்ல இப்போ அவங்க இல்ல நான் மட்டும்தான் இருக்கேன் என இனியாவை ரூமுக்கு அழைத்துச் சென்று படிக்க வைக்கிறார்.

பிறகு அங்கு வரும் ராதிகா கோபியிடம் பேச முயற்சி செய்ய கோபி கொஞ்ச நேரம் அமைதியாக குழந்தை படிச்சிட்டு இருக்கா என தொடர்ந்து கடுப்பாக்குகிறார். இதைப் பார்த்து இனிமையாகும் நக்கலாக சிரித்து மேலும் வெறுப்பேற்றுகிறார்.

மறுநாள் காலையில் ஆபீஸில் ராதிகா ரூமில் இருக்க பாக்யா அவரிடம் கேண்டின் விஷயமாக பேச வந்திருக்க ராதிகா தொடர்ந்து பாக்கியவை வெளியே காக்க வைத்து வெறுப்பேற்றுகிறார். இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.