எச்சரித்த கோபிக்கு பாக்கியா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்யா மற்றும் கோபி என இருவரும் வாக்கிங் வர அப்போது கோபி பாக்கியாவை வழி மறித்து நீ பண்றது கொஞ்சம் கூட சரியில்ல, நீ ரொம்ப மாறிட்ட முன்பு மாதிரி இல்ல மொத்தமா மாறிட்ட என சத்தம் போடுகிறார்.

யார் அந்த ஆளு அவன் கூட எதுக்கு பேசுற அவன் கூட நீ பைக்ல எல்லாம் போறதா சொன்னாங்க என சத்தம் போட நான் யார் கூட பைக்ல போனா உங்களுக்கு என்ன அதை பத்தி நீங்க எதுக்கு கவலைப்படுறீங்க? என பாக்யா பதிலுக்கு கேள்வி எழுப்புகிறார். உன்னை நம்பி என் பசங்க அம்மா எல்லாம் இருக்காங்க, எனக்கு அவங்க மேல அக்கறை இருக்கு என்ன சொல்ல பாக்கியா அந்த அக்கறையில் தான் நீங்க விட்டுட்டு போய் வேற கல்யாணம் பண்ணிங்களா என கேட்டு ஷாக் கொடுக்கிறார்.

நான் என்ன பண்ணனும் என்ன பண்ண கூடாதுன்னு சொல்ல உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல சார் என சொல்ல என்ன புதுசா சார் மோர்ன்னு பேசிகிட்டு என கோபி கேட்க என் வீட்டு அக்கம் பக்கம் எதிர்க்க என நிறைய வீடு இருக்கு அந்த மாதிரி தான் நீங்களும் ஒரு வீட்டில் இருக்கீங்க. எனக்கு நீங்க மூணாவது மனுஷன் தான் அப்போ சார் என்று சொல்லி தானே கூப்பிடனும் என பஞ்ச் கொடுக்கிறார். மேலும் நான் எங்க போறேன் என்ன பண்றேன்னு நீங்க எதுக்கு என்னை ஃபாலோ பண்றீங்க? உங்களுக்கு இப்போ கல்யாணம் ஆகி ஒரு குடும்பம் இருக்கு, அப்படி இருக்கையில் நான் உங்களை பாலோவ் பண்ணி இதை பண்ணுங்க பண்ணாதீங்கன்னு சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும் என பதிலடி கொடுக்கிறார்.

பிறகு அங்கிருந்து நகரும் பாக்யா டோன்ட் ஃபாலோ மீ என ஆங்கிலத்தில் பேசி அதிர்ச்சி கொடுக்கிறார். மேலும் உங்களுக்கு ஏற்கனவே சுகர் பிபி இருக்குனு நினைக்கிறேன். அதனால்தான் வாக்கிங் வரீங்க என்று நினைக்கிறேன் இப்போ மத்தவங்கள பத்தி கவலைப்பட்டு உங்க பிபி அதிகமாயிட போது என சொல்லி கிளம்பிச் செல்ல கோபி புலம்புகிறார்.

அடுத்து பாக்கியா கேன்டினில் எல்லாம் நல்லதா இருக்கணும் சாப்பாடு சுவை குறைய கூடாது, அதே சமயம் இந்த இடமும் சுத்தமாக இருக்கணும் என செல்வியிடம் பேசிக்கொண்டிருக்க அப்போது அங்கு வரும் ராதிகா இன்னுமும் புடவையில் தான் இருக்கீங்களா உங்களுக்கு கொடுத்த டைம் நாளையோடு முடியப்போகுது, யூனிஃபார்ம்ல வரணும் இல்லனா உங்க கேன்டீன் காண்ட்ராக்டர் க்ளோஸ் பண்ணி திரும்பவும் டெண்டர் விடுவேன் என எச்சரிக்க நாளைக்கு வரைக்கும் டைம் இருக்குல, நாளைக்கு பாத்துக்கலாம் மேடம் என பாக்யா பதிலடி கொடுக்கிறார்.

நாளைக்கு மட்டும் என்ன மாறிட போது பொறந்ததிலிருந்து புடவையில் இருக்க நீங்க சுடிதார் போட போறீங்களா என்ன? மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு கெளம்ப ரெடியா இருங்க என சொல்ல செல்வி நாங்க எப்போ பிறந்ததிலிருந்து புடவை கட்டிக்கிட்டு இருந்தோம், பதினெட்டு வயசுல இருந்து தான் புடவை கட்ட தொடங்கினோம் நீங்க பொறந்ததுல இருந்தே புடவை கட்டணீங்களா என்ன? உங்களுக்கு உங்க அம்மா கட்டி விடுவாங்களா இல்ல நீங்களே கட்டிப்பீர்களா என ராதிகாவை நக்கல் அடிக்கிறார்.

அடுத்து பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸில் இருக்க அப்போது பழனிச்சாமி செய்யும் பிசினஸ் பற்றி கேட்க அவர் இரண்டு மூன்று விசிட்டிங் கார்டுகளை எடுத்துக் கொடுத்து தனது பிசினஸ் பற்றி சொல்ல பாக்கியா அசந்து போகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் இனியா சரணுடன் ஹோட்டல் ஒன்றில் சாப்பிட்டுக் கொண்டிருக்க அதை பார்த்துவிடும் ராதிகா நேராக இனியாவை நோக்கி வர இனியா அதிர்ச்சி அடைகிறாள்.