அமிர்தாவை மறக்க சொன்ன ஈஸ்வரிக்கு எழில் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எனில் நான் அமுதாவை காதலிக்கிறேன் அவங்கள கல்யாணம் பண்ணிக்கொண்டு அவங்களுக்கும் அவங்க அப்பா அம்மாவுக்கும் வாக்கு கொடுத்து இருக்கேன் என சொல்ல ஈஸ்வரி நான் உயிரோட இருக்கும் வரை அது நடக்காது என பதில் கொடுக்கிறார். அது எல்லாம் இதோட மறந்திடு நான் யாருன்னு உனக்கு நல்லாவே தெரியும் என எச்சரிக்கிறார்.

அமிர்தாவை மறக்க சொன்ன ஈஸ்வரி.. எழில் கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு பாக்கியா கடைக்குச் சென்று வரும்போது கோபி வழியில் பார்த்து கூடிய சீக்கிரம் நீ வீட்டை காலி பண்ண வேண்டியது இருக்கும், என் குடும்பத்தை என்னால பாத்துக்க முடியும் நீயும் உன் செல்ல புள்ளையும் என்ன பண்ணனும்னு இப்பவே முடிவெடுத்துக்கோங்க என மிரட்டி விட்டு செல்கிறார்.

அதன் பிறகு ராமமூர்த்தி வீட்டுக்கு வர ஈஸ்வரி நடந்த விஷயங்களை சொல்ல பாக்கியா வந்ததும் அவர் எழுந்தை கூப்பிட சொல்கிறார். எனில் கீழே வந்ததும் இதெல்லாம் நமக்கு செட்டாகாது அமிர்தாவை மறந்துடு என சொல்ல ஈஸ்வரி சொல்றத நல்லா கேட்டுக்க என கூறுகிறார். உடனே எழில் இனி உங்கள் வீட்டில் அமிர்தாவை பற்றி பேச மாட்டேன் அதே மாதிரி நீங்களும் வர்ஷினியை கல்யாணம் பண்ணிக்கங்க பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு வெளியே சென்று விடுகிறார். உடனே பாக்கியா ஈஸ்வரியிடம் அவன் தான் இனி அமிர்தாவை பத்தி பேச மாட்டேன்னு சொல்லிட்டாங்க, அதே மாதிரி அவனுக்கு பிடிக்காத வாழ்க்கையை அவனுக்கு அமைச்சு கொடுக்க வேண்டாம். உங்கள் பையனுக்கு பிடிக்காத மனைவியா நான் இங்க வந்து இப்ப வரைக்கும் பிடிக்காத வாழ்க்கை தான் வாழ்ந்துட்டு இருக்கேன் அதே வலி என் பையனுக்கு வேண்டாம் என சொல்ல ஈஸ்வரி, ராமமூர்த்தி என இருவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அமிர்தாவை மறக்க சொன்ன ஈஸ்வரி.. எழில் கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

வீட்டுக்கு வரும் எழில் எவ்வளவு நாள் ஆனாலும் நான் அமிர்தாவை தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என சொல்கிறார். இந்த வீட்டு பிரச்சனையை நான் பார்த்துக்கிறேன் நீ உன் வேலையை பாரு என பாக்யா சொல்ல என்னால அப்படி இருக்க முடியாது இந்த வீட்டை நான் மீட்டெடுத்து தான் ஆகணும் என்ன சொல்கிறார். அடுத்து ராமமூர்த்தி கோபியிடம் உன்னால வீட்டில் எல்லாரும் நிம்மதி இழந்து இருக்காங்க நீ நல்லாவே இருக்க மாட்ட என சண்டை போடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.