பாக்யாவின் குடும்பத்தால் ஏற்பட்ட அசிங்கத்தால் ராதிகா சபதம் ஒன்றை எடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா வீட்டில் ஜெனி எல்லோரும் வருகிறார்கள் என்பதால் யூட்யூப் வீடியோவை பார்த்து சட்னி அரைத்து இட்லி ஊத்தி வைக்க திட்டம் போட்டு அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

பாக்கியா குடும்பத்தால் ஏற்பட்ட அசிங்கத்தால் ராதிகா எடுத்த சபதம், திக்கித் திணறும் கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

ஒரு வழியாக சட்னிக்கு தேவையானதை தயார் செய்த நிலையில் இட்லிக்கு மாவு ஊட்டும் போது செழியன் அங்கு வந்து ஜெனியுடன் ரொமான்ஸ் செய்து மொத்த மாவையும் கீழே கொட்டுகிறார். அதன் பிறகு செழியன் நான் போய் ஹோட்டலில் வாங்கி வந்து விடுகிறேன் என சொல்லி வெளியே சென்று விட அதற்குள் எல்லோரும் வந்து விடுகின்றனர்.

ஆனால் ஜெனி உங்களுக்காக நானே சமைத்து விட்டேன் நீங்க எல்லாரும் போய் குளிச்சிட்டு தயாராகி வாங்க என மொத்த பேரையும் மேலே அனுப்பி வைத்துவிட்டு செய்து என் வந்ததும் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த பொருட்களை தான் சமைத்தது போல அனைத்தையும் பாத்திரங்களுக்கு மாற்றுகிறார். ஜெனியின் நடவடிக்கையில் சந்தேகப்படும் எழில் இதை கண்டுபிடித்துவிட பிறகு பாக்யாவிடம் சொல்ல இருவரும் கீழே வருகின்றனர்.

செழியன் இந்த மூணு நாளும் ஜெனிதான் சமைச்சா அவ்வளவு சூப்பரா இருந்துச்சு என பில்டப் கொடுக்க ஜெனி நான் சமைக்கலன்னு ஏற்கனவே சொல்லிட்டேன் நீ கொஞ்சம் அமைதியா இரு என செழியனை அடக்குகிறார். இந்த பக்கம் இவர்கள் இப்படி கலகலப்பாக இருக்க அந்த பக்கம் ராதிகா கோபமாக பேச சென்ற இடத்தில் எது பிரச்சனை என்பதை புரிந்து கொண்டு ராதிகாவின் அம்மா என்ன ஆச்சு என கேட்க கோபி அதெல்லாம் ஒன்றும் இல்லை என சொல்லி சமாளிக்கிறார்.

பாக்கியா குடும்பத்தால் ஏற்பட்ட அசிங்கத்தால் ராதிகா எடுத்த சபதம், திக்கித் திணறும் கோபி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக ராதிகா ரூமுக்குள் என்ன அசிங்கப்படுத்தினவங்க முன்னாடி நாம நல்லபடியாக வாழ்ந்து காட்டணும் என சபதம் எடுக்கிறார். வீட்டில் இருப்பவர்களை சமாளிக்க முடியாமல் கோபி திக்கி திணறுகிறார்.