ராதிகாவை வீட்டை விட்டு வெளியேற சொல்லியிருக்கிறார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா கோபியிடம் நீங்க மயூவை கண்டுக்க மாட்டீங்க என சண்டை போட இருவருக்கும் வாக்குவாதம் அதிகமாகின்றது. நான் நீ மயூ கிட்ட இப்படித்தான் இருக்கணும்னு உடனே எந்த விதத்திலும் கண்ட்ரோல் பண்றது கிடையாது அதே மாதிரி நீ என்னை கண்ட்ரோல் பண்ணாத. என் பொண்ணு என்ன கூப்பிட்டாலும் கூப்பிடலனாலும் அவளுக்கு ஒரு நல்ல விஷயம் நடந்தால் நான் போய் நிற்கத்தான் செய்வேன், அத வீடியோ எடுப்பேன் ஆயிரம் முறை பார்ப்பேன் அதை பத்தி நீ கேள்வி கேட்கக் கூடாது என கோபி சத்தம் போடுகிறார்.

அதே மாதிரி மயூக்காகவும் நான் எல்லா நேரத்திலும் வந்து நிற்பேன் என சொல்கிறார். ஆனால் ராதிகா தொடர்ந்து கோபியிடம் சண்டை போடுகிறார். சண்டை போடணும்ன்றதுக்காக சண்டை போடுறவங்க கிட்ட எதையும் பேச முடியாது என சொல்கிறார் கோபி. ராதிகா என்ன வெறுப்பேத்தறதுக்காக தானே இனியா கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசறீங்க என கேட்கிறார், உங்களுக்காக நான் மயூவையே விட்டுட்டு வந்து இருக்கேன் என சொல்ல உன்னை யார் வர சொன்னது கிளம்பி போக வேண்டியது தானே என அதிர்ச்சி கொடுக்கிறார் கோபி.

பிறகு கோபி ஆபீஸ் கிளம்பி சென்றதும் பழனிச்சாமி வீட்டுக்கு வர அவரை உட்கார வைத்து எல்லோரும் சிரித்துப் பேசிக் கொண்டிருக்கின்றனர். பழனிச்சாமி இனியாவுக்கு கிப்ட் கொடுத்து விட்டு பிறகு தன்னுடைய அம்மாவின் 80 ஆவது பிறந்தநாளுக்கு வீட்டில் உள்ள எல்லோரையும் அழைக்கிறார். எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போது கோபி வர பழனிச்சாமியை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பிறகு பழனிச்சாமி கோபியை பார்த்து யாரோ வந்திருக்காங்க என்று சொல்ல எல்லோரும் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கின்றனர். நேராக கோபி மாடிக்கு செல்ல முயற்சி செய்ய தடுத்து நிறுத்தும் பழனிச்சாமி நீங்க பாட்டுக்கு உள்ள போறீங்க யார் நீங்க சேல்ஸ்மேன்னா சோப்பு சீப்பு விக்க வந்து இருக்கீங்களா என கேட்டு கோபியை கடுப்பாக்க கோபி ஒரு வார்த்தை கூட பேசாமல் மேலே சென்று விடுகிறார்.

பிறகு ராமமூர்த்தி எங்க பையன் தான் என்று சொல்ல பழனிச்சாமி நான் போய் மன்னிப்பு கேட்டு வந்துடுறேன் என சொல்லி போக அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி அவரை உட்கார வைக்கின்றனர். மேலே போன கோபி என்னை பார்த்தா சேல்ஸ்மேன் மாதிரியா இருக்கு என புலம்புகிறார். பாக்கியா தான் அவர் வருவாரு இப்படி அவர கிண்டல் அடிங்கன்னு சொல்லி கூப்பிட்டு வந்து இருப்பா என ஆவேசப்படுகிறார்.

மறுபக்கம் ராதிகா தன்னுடைய வீட்டில் உட்கார்ந்திருக்க அவரது அம்மா வீட்டுக்கு போகலையா என்று கேட்க ராதிகா அங்க போகவே புடிக்கல, அவர் இனியா மேல ரொம்ப பாசமா இருக்காரு நானா இனியாவானு வந்தா யோசிக்காம இனியா பக்கம் போயிடுவாரு என சொல்ல அப்படின்னா நீ மயூவை அங்க கூட்டிட்டு போயிடு என சொல்ல ராதிகா அதெல்லாம் உடனடியா பண்ண முடியாது நான் கொஞ்சம் யோசிக்கணும் என்று சொல்கிறார்.

பிறகு ராமமூர்த்தியும் ஈஸ்வரியும் பாக்யாவை கோபிக்கு கட்டி வைத்த கதையையும் அவர் தங்களை பார்த்துக் கொள்ளும் விதத்தையும் பற்றி பேசுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.