வீட்டுக்குள் நுழைந்ததும் பாக்கியாவை வெளியே போக சொல்கிறார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி ஈஸ்வரி சொன்ன விஷயங்கள் எதுவும் சரிப்பட்டு வராது நான் கிளம்புறேன் என வெளியே வர ராதிகா வீட்டுக்குள் என்ட்ரி கொடுக்கிறார்.

இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைய ஈஸ்வரி கையில் என்ன பேக்கு கோபியோட துணியா நானே ஒரு ஆளை விட்டு எடுத்துட்டு வர சொல்லலாமுன்னு நெனச்சேன் நீயே எடுத்துட்டு வந்துட்ட, அப்படி வச்சுட்டு கெளம்பு என சொல்ல நான் எதுக்கு கிளம்பனும் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

மேலும் கோபி என்னை சட்டப்படி கல்யாணம் பண்ணிக்கிட்ட புருஷன் அவர் எங்க இருக்காரோ அங்க தான் நானும் இருப்பேன் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

உடனே ராமமூர்த்தி ஏமா ஏற்கனவே இங்கே 1008 பிரச்சனை போயிட்டு இருக்கு நீ வேற என கேட்க எல்லாருக்கும் நியாயம் சொல்ற நீங்களே சொல்லுங்க கட்டுன புருஷன் இருக்க வீட்ல தானே அவ பொண்டாட்டி இருக்கணும் என கேட்க ராமமூர்த்தி பதில் சொல்ல முடியாமல் நிற்கிறார். அப்போது எழில் இதுக்குத்தானே பாட்டி வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன் என கேட்க ‌ பாக்கியா இப்பவாவது சொல்லுங்க நான் என்ன பண்ணனும் அத்தை சொல்லுங்க என கேட்க ராதிகா வெளியே போ என சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

எங்கம்மா எதுக்கு வெளியே போகணும் நீங்க தான் வெளியே போகணும் என எழில் சொல்ல ஈஸ்வரி பாக்கியா எதுக்கு வெளியே போகணும் அவ எங்க மருமக இங்க தான் இருப்பா எங்கிருந்தோ வந்த நீ தான் வெளியே போகணும் என சொல்ல ராதிகா, கோபி என்னுடைய புருஷன் எங்க ரெண்டு பேருக்கும் சட்டப்படி கல்யாணம் ஆகி இருக்கு.. அப்போ நான் தானே உங்க மருமகள்? எந்த சம்பந்தமே இல்லாத அவ எதுக்கு இங்கே இருக்கணும் என ஷாக் கொடுக்கிறார்.

அதெல்லாம் எனக்கும் தெரியும் ஆனா எப்பவும் பாக்கியா தான் என்னுடைய மருமக உன்ன ஒரு நாளும் மருமகளா ஏத்துக்க முடியாது, அவள வெளியே போக சொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கு என கேட்க அதேதான் என்னை வெளியே போக சொல்ல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு என கேட்டு மேலும் அதிர்ச்சி கொடுக்கிறார்.

கோபி பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாக இருக்க செழியன், இனியா என்னப்பா அமைதியாகவே இருக்கீங்க என கேட்க கோபி ராதிகா ஒரு நிமிஷம் என் கூட வா என சொல்லி ரூமுக்கு அழைத்துச் சென்று சமாதானம் செய்ய முயற்சி செய்ய ராதிகா நான் இங்கதான் இருப்பேன், என்னுடைய வாழ்க்கையை என்னால விட்டுக் கொடுக்க முடியாது என அதிர்ச்சி கொடுக்கிறார்.

நீ இந்த வீட்ல இருக்கிறதெல்லாம் சரிப்பட்டு வராது பாக்கியா வேற இங்கே இருக்கா என சொல்ல ஓ பாக்கியா இருக்கு இடத்தில நான் இருக்க கூடாதா என ராதிகா கேட்க இல்ல நீ இருக்கிற இடத்தில அந்த இடியட் இருக்கக் கூடாது என கோபி சொல்ல அப்படின்னா அவளை வெளியே போக சொல்லுங்க நான் இங்கதான் இருப்பேன் என ஷாக் கொடுக்கிறார்.

பிறகு ரூமில் இருந்து ராதிகா வெளியே வர கோபியும் பின்னாடியே வர ஈஸ்வரி என்ன கோபி பேசியாச்சா அவ கிளம்புறா தானே என கேட்க நான் எதுக்கு வெளியே போகணும்? நான் இங்கதான் இருப்பேன் நான் இங்கே இருக்கிறது பிடிக்காதவங்க வெளிய போகலாம் என சொல்லி அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌