இனியா கோபிக்கு அதிர்ச்சி கொடுத்த தாத்தா தரமான சம்பவம் செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு பாக்கியா இந்தியாவின் நினைத்து அழுது கொண்டிருக்க எழில் சமாதானம் செய்கிறார்.

இனியா கொடுத்த அதிர்ச்சி, தாத்தா செய்த சம்பவம்., கோபி மீது பயங்கர கோபத்தில் ராதிகா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் மறுநாள் காலையில் தூங்கி எழுந்து கொள்ளும் இனியா கோபியை தேட அவர் வாக்கிங் சென்றிருப்பதாக ராதிகா கூறுகிறார். தூங்கி எழுந்ததும் பெட்ஷீட் மடித்து வைத்துவிடு என ராதிகா சொல்ல இனியா ஷாக்காகிறாள். பிறகு கோபி வந்ததும் நான் வீட்டுக்கு போறேன் அம்மா பாவம் என சொல்ல கோபி இனியாவை இங்கேயே இருக்க சொல்லி பேசுகிறார்.

இந்த பக்கம் ஈஸ்வரி இனியவை இப்பவே கூட்டிட்டு வாங்க என சத்தம் போட பாக்யா அவள வரட்டும் நம்ப போய் கூட்டிட்டு வந்தா அவ செஞ்சு தப்பா அவளுக்கு தெரியாமையே போயிடும் என பேச எழில் அம்மா சொல்றது சரிதான் என கூற இது எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் தாத்தா சட்டை மாட்டிக் கொண்டு கையில் பேக்கை தூக்கிக்கொண்டு வெளிய வர நீங்க எங்க போறீங்க என கேட்க இனியா இருக்க வீட்டுக்கு என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்யா சொன்னதுதான் சரி அதுக்காக இனியாவை அப்படியே விட்டு விட முடியாது, அவ செஞ்சது தப்புன்னு புரிய வைத்து கூட்டிட்டு வரேன் யாரும் எதுவும் பேசக்கூடாது என கிளம்பிச் செல்ல அங்கு இனியா தாத்தாவை பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொள்ள ஏண்டா இப்படி பண்ண என கேட்க பயமா இருந்தது அதனால தான் இப்படி பண்ணினேன் என இனியா கூறுகிறாள். கோபி இனியாவலாம் அனுப்ப முடியாது நீங்க எதுக்கு இங்க வந்தீங்க என கேட்க நான் இனியாவோட இருக்க வந்தேன் என கூறுகிறார்.

இனியா கொடுத்த அதிர்ச்சி, தாத்தா செய்த சம்பவம்., கோபி மீது பயங்கர கோபத்தில் ராதிகா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

உடனே இனியா சந்தோஷப்பட்டு சூப்பர் தாத்தா எனக்கே ஒரு மாதிரி இருந்துச்சு இப்போ நீங்களும் வந்துட்டீங்க ஜாலியா இருக்கும் என சொல்ல ராதிகா கோபியை பார்த்து முறைக்க கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.