ராஜேஷ் போலீசில் புகார் கொடுக்க ராதிகாவுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் செல்வி ராதிகா வீட்டில் பிரச்சனை என சொன்னதும் பாத்தியா அவங்களுக்கு பிரச்சனை மேல பிரச்சனை வந்துட்டே இருக்கு. ரொம்ப பாவம். அவங்க இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கிட்டு சந்தோஷமா வாழலாம்னு சாமிகிட்ட வேண்டிகிட்டு தான் இருக்கேன் என கூறுகிறார். பிறகு கோபி என்ன ஆச்சு எனக்கு பாக்கியா அவங்க வீட்டுக்கு போனதாகவும் ராதிகா தன்னிடம் வருத்தப்பட்டு பேசியதாகவும் கூறுகிறார்.

போலீசில் புகார் கொடுத்த ராஜேஷ்.. ராதிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, கோபி செய்ய போவது என்ன? பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்..!!

இந்த பக்கம் ராதிகாவை அவருடைய அம்மா எல்லாத்துக்கும் நீதான் காரணம் என திட்டுகிறார். உங்களுக்கு இடையே மயூ தான் மாட்டிக்கொண்டு ரொம்ப கஷ்டப்படுறா என கூறுகிறார். அதன்பிறகு ராஜேஷ் போலீஸ் ஸ்டேஷனில் ராதிகா தன்னுடைய மகளை தன் கண்ணில் காட்ட மாட்டேங்கிறார். மேலும் அவருடைய வீட்டுக்கு அடிக்கடி ஒருத்தர் வந்துட்டு போறார் இதனால் என்னுடைய பெண்ணுக்கு பாதுகாப்பு இல்லை அவளை என்னிடம் ஒப்படைத்து விடுங்கள் என புகார் அளிக்கிறார்.

இந்த பக்கம் கோபி தன்னுடைய நண்பரிடம் எப்படியாவது ராதிகாவுடன் சேர்ந்திட வேண்டும் அதற்கு ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என பார்த்து கொண்டு இருக்கிறேன் எனக் கூறுகிறார். பொலீஸ் ராதிகா வீட்டிற்கு வந்து அவரை ஸ்டேஷனுக்கு அழைக்க அவர் என் மகளை ஸ்கூலில் இருந்து அழைத்து வந்துவிட்டு வந்துவிடுகிறேன் என கால அவகாசம் கேட்ட ஸ்டேஷனுக்கு நீங்கள் வரவில்லை என்றால் நாங்கள் வேற மாதிரி ஆக்ஷன் எடுக்க வேண்டியிருக்கும் என போலீசார் கூறி விட்டுச் செல்கின்றனர்.

போலீசில் புகார் கொடுத்த ராஜேஷ்.. ராதிகாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி, கோபி செய்ய போவது என்ன? பாக்கியலட்சுமி இன்றைய எபிசோட் அப்டேட்..!!

இதனையடுத்து ராதிகாவின் அம்மா இது எல்லாத்துக்கும் நான் ஒரு முடிவு கட்டுகிறேன் என யாரோ ஒருவருக்கு போன் செய்கிறார். அந்த நபர் யாரென்று ட்விஸ்ட்டுடன் இந்த எபிசோட் முடிவடைகிறது. ‌‌