கேண்டீன் ஆர்டர் கேன்சல் ஆனதால் பாக்யாவுக்கு ராதிகா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கேன்டீன் ஆர்டர் விஷயமாக பாக்கியாவும் எழிலும் ஆபிசுக்கு சென்று இருந்த நிலையில் ஆபீஸ் ஓனர் உங்களுக்கு இந்த ஆர்டரை கொடுக்க முடியாது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். பாக்யாவும் எழிலும் என்ன காரணம் என கேட்க ராஜசேகர் சொன்ன ஒரே காரணத்துக்காக தான் உங்களுக்கு இந்த ஆர்டர் கொடுத்தேன். ஆனால் நிறைய போட்டி இருக்கு ஆசையால் உங்களுக்கு இப்போது கொடுக்க முடியாது என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

கேன்சல் ஆன கேன்டீன் ஆர்டர்.. பாக்யாவுக்கு ராதிகா கொடுத்த அதிர்ச்சி, ஈஸ்வரி கொடுத்த ஷாக் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு பாக்யா மற்றும் எழில் இருவரும் வருத்தத்தோடு வீடு திரும்ப அவர்களை தடுத்து நிறுத்துகிறார் ராதிகா. ராதிகாவை பார்த்து இருவரும் அதிர்ச்சி அடைய இது என்னுடைய ஆபீஸ் இங்க எல்லாமே நான் தான். கேன்டீன் ஆர்டர் கேன்சலாக நான் தான் காரணம். ஏரியா செக்ரட்டரி எலக்சன்ல ஜெயிச்சதும் என்னம்மா பேசினீங்க படிப்பு எல்லாம் ஒண்ணுமே இல்லன்னு சொன்னீங்க படிப்பு தான் எல்லாமே, அதுதான் எல்லாத்தையும் தீர்மானிக்கும். இன்னைக்கு உங்க ஆர்டர் கேன்சலாகவும் என்னுடைய பதவி தான் காரணம் என சொல்கிறார்.

பிறகு பாக்கியா ஏரியாவுல கரண்ட் இல்ல தண்ணி வரலன்னு சொல்லுவீங்க அப்போ உங்க பதவியை வைத்து என்ன பண்ண முடியுதுன்னு பார்க்கலாம் என சவால் விட்டுவிட்டு அங்கிருந்து வருகிறார் பாக்கியா.

கேன்சல் ஆன கேன்டீன் ஆர்டர்.. பாக்யாவுக்கு ராதிகா கொடுத்த அதிர்ச்சி, ஈஸ்வரி கொடுத்த ஷாக் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் வீட்டுக்கு வரும் தயாரிப்பாளரின் மகள் ஈஸ்வரியை பார்த்து அவரிடம் தனியாக இருக்கும்போது எழிலை காதலிக்கும் விஷயத்தை கூறுகிறார். அதே சமயம் எழில் தன்னை பிடிக்கவில்லை என சொல்கிறார் அந்த அமிர்தாவை தான் பிடித்திருப்பதாக கூறுகிறார் என்பதையும் போட்டு உடைக்க ஈஸ்வரி அதிர்ச்சியடைகிறார். பிறகு பாக்யா வீட்டுக்கு வர தயாரிப்பாளரின் மகள் இங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

கேன்சல் ஆன கேன்டீன் ஆர்டர்.. பாக்யாவுக்கு ராதிகா கொடுத்த அதிர்ச்சி, ஈஸ்வரி கொடுத்த ஷாக் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு பாக்கியாவும் எழிலும் டல்லாக இருப்பதை பார்த்து என்னாச்சு என கேட்க பாக்கியா கேன்டீன் ஆர்டர் கிடைக்கவில்லை என சொல்ல ஈஸ்வரி உட்பட எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இதுக்காக நிறைய செலவு பண்ணி இருக்கியே என சொல்ல எனக்கும் என்ன பண்றதுன்னு தெரியல அத்தை என பாக்கியா பாவமாக கூற கோபி உன்ன திட்டுறதுல தப்பே இல்ல. எதையும் தெரிஞ்சிக்கிட்டு கால விடனும் என கோபப்பட்டு பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.