பெட்டியில் கோபியும் துணி இருப்பதை பார்த்து குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பெட்டியில் கோபி என் துணி இருப்பதை பார்த்து குடும்பத்தார் அனைவரும் அதிர்ச்சி அடைய கோபியின் அப்பா ராமமூர்த்தி சபாஷ் பாக்யா என பாராட்டுகிறார். அதை என் மருமகளே சொல்லிட்டாளே வீட்டை விட்டு வெளியே போடா என சொல்ல கோபி நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்னா என பாக்கியவை அடிக்க பாய அதனை தடுத்து நிறுத்துகிறார் ராமமூர்த்தி.

பெட்டியில் கோபியின் துணி.. பாக்கியா கொடுத்த அதிர்ச்சி, கடைசியில் கோபி வைத்த செக் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு பாக்யா நான் உங்கள இந்த வீட்டை விட்டு வெளியே போக சொல்ல உங்களுக்கும் எனக்கும் இனி எந்த உறவும் கிடையாது ஒரே ரூம்ல இருக்க முடியாது என சொல்ல பாக்கியா என் பையன் இந்த வீட்டை விட்டு வெளியே போகணும்னா நீ தப்பு மேல தப்பு பண்ணிக்கிட்டு இருக்க அவன் என்னதான் தப்பு பண்ணி இருந்தாலும் இந்த வீட்டோட தூண். செய்த தப்பை சரி பண்ண பார்க்கணுமே தவிர துணையே இடிச்சு தள்ள முடியாது என வசனம் பேசுகிறார்.

உனக்கு எனக்கும் எந்த உறவும் இல்லைனு ஆன பிறகு உனக்கு இந்த வீட்ல என்ன உரிமை இருக்கு என கோபி கேட்கிறார். மரியாதையா வீட்டை விட்டு வெளியே போ என சொல்ல என்னை வீட்டை விட்டு வெளியே போக சொல்ல உங்களுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு என பாக்கியா கேட்கிறார். உனக்கும் எனக்கும் ஊட்டும் வரவும் இல்லனை ஆனதுக்கு அப்புறம் உனக்கு இந்த வீட்ல இருக்க என்ன ரைட்ஸ் இருக்கு என கோபி கேட்க உங்களுக்கு கழுத்தண்ணிட்டு தாலி கட்டிக்கிட்ட ரைட்ஸ் இருக்கு உங்களோடு சேர்ந்து மூணு குழந்தைகளை பெத்துகிட்ட ரைட்ஸ் இருக்கு. எதுக்காகவும் என்னுடைய உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது ஆம்பளைங்க தப்பு பண்ணுவீங்க, பொம்பளைங்க கண்ண கசக்கிட்டு நடுரோட்டில் நிக்கணுமா என்னால முடியாது நான் இந்த வீட்ல தான் இருப்பேன் என பாக்யா கூறுகிறார்.

பெட்டியில் கோபியின் துணி.. பாக்கியா கொடுத்த அதிர்ச்சி, கடைசியில் கோபி வைத்த செக் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

திரும்பவும் ராமமூர்த்தி நீதான் தப்பு பண்ண நீ தான் வீட்டை விட்டு வெளியே போகணும் போடா என்ன சொல்ல கோபி அப்போ நானும் வெளிப்படையா கேட்கிறேன் என சொல்லி இந்த வீட்டுக்காக நான் இதுவரைக்கும் 40 லட்சம் செலவு பண்ணி இருக்கேன் அந்த பணத்தை எடுத்து வையுங்க நான் போறேன். அதுவும் அந்த பணத்தை பாக்கி தான் கொடுக்கணும் என கோபி தொல்ல பாக்கியா அதிர்ச்சடைகிறார். உடனே ஜெனி ஆன்ட்டி கிட்ட அவ்வளவு பணம் எப்படி இருக்கும் என கேட்க அதெல்லாம் எனக்கு தெரியாது அவ தான் பணத்தை எடுத்து வைக்கணும் அப்போ நான் இந்த வீட்டை விட்டு வெளியே போறேன் என கோபி சொல்கிறார். ஒரு கட்டத்தில் பாக்யா உங்களுக்கு என்ன பணம் தானே வேணும்? நான் தரேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.