இனியாவை வீட்டை விட்டு துரத்தி உள்ளார் ஈஸ்வரி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடு ஸ்கூலில் கோபி வந்து போனதை கேட்டு பாக்கியா அதிர்ச்சியில் அப்படியே இனியாவுக்காக காத்துக் கொண்டிருக்க இனியா வந்ததும் தோழிகளிடம் இனியாவை நா கூட்டிட்டு போறேன் என சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு பிரின்ஸ்பல் அம்மாவ கூட்டிட்டு வர சொன்னாங்களா என கேட்க இனியா விஷயம் தெரிஞ்சுடுச்சு என அதிர்ச்சி அடைகிறாள்.

இனியாவை வீட்டை விட்டு துரத்திய ஈஸ்வரி.. கோபி எடுத்த முடிவு, ஷாக்கான குடும்பம் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பிறகு பாக்கியா இனியாவை கூட்டிக்கொண்டு வீட்டுக்கு வர வீட்டில் வந்து நடந்த விஷயங்களை சொல்ல எல்லாரும் கோபப்படுகின்றனர். வீட்ல சொல்லி இருக்க வேண்டியதுதானே என சத்தம் போட எல்லோரும் இப்படித்தான் சத்தம் போட்டு இருப்பீங்க அதனாலதான் சொல்லல கண்டிப்பா பேலன்ஸ் வரணும்னு சொன்னாங்க வேற வழி இல்லாம லஞ்ச் பிரேக்ல நான் தான் டாடிக்கு போன் பண்ணி வர வெச்சேன் என சொல்கிறார்.

தப்பு பண்ணிட்டு திமிரா பேசுற என பாக்கியா இரண்டு அறை அறைய பிறகு டாடி தான வர சொன்னேன் அவர் வந்து எவ்வளவு நல்லா பேசினாரு, என்கிட்ட கோபமே படல நீங்க தான் எல்லோரும் சேர்ந்து ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு இப்படி திட்டுறீங்க என சொல்ல ஈஸ்வரி அடிக்க பாய நீங்களும் என்னை அடிக்க வரீங்களா? அப்பா வீட்டை விட்டு வெளியே போனதும் எல்லாரும் என்ன அடிக்கறீங்க என அழ உன் டாடி தான் வேணும்னா அவன் கூடவே போய் இருக்க வேண்டியதுதானே என ஈஸ்வரி சொல்ல நான் போறேன், இந்த வீட்டை விட்டு எங்கேயாவது போறேன் என பேக்கை தூக்கி கொண்டு கிளம்புகிறார்.

இனியாவை வீட்டை விட்டு துரத்திய ஈஸ்வரி.. கோபி எடுத்த முடிவு, ஷாக்கான குடும்பம் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த நேரத்தில் காரில் இருந்து கீழே இறங்கும் கோபி வீட்டில் சத்தம் கேட்பதை பார்த்து வீட்டு வாசலில் வந்து நிற்க இனியா எல்லாரும் என்னை அடிக்கிறாங்க திட்றாங்க நான் இந்த வீட்டை விட்டு போக போறேன் என சொல்ல உனக்காக நான் பேசுறேன் என கூட்டிக்கொண்டு கோபத்துடன் வீட்டுக்குள் வருகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.