கல்யாண விஷயத்தைப் பற்றி சொல்ல அம்மாவை சந்திக்கிறார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் எல்லோரும் கல்யாணத்திற்கு துணி எடுத்துக்கொண்டு காரில் வந்து கொண்டிருக்கும் போது கோபி இனியாவை பற்றி பேச ராதிகா எனக்கு இந்த டிரஸ் பிடிக்கலையா வேணும்னா வேற கடையில வேற ஒரு புது ட்ரெஸ் எடுக்கலாம், இனியாவுக்கு புடிக்கலனாலும் சொல்லுங்க நாம மாத்திக்கலாம் என ராதிகா ஆறுதல் படுத்துகிறார்.

கல்யாண விஷயத்தை சொல்ல அம்மாவை சந்திக்கும் கோபி.. ராதிகா சொன்ன வார்த்தை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்த பக்கம் எழில் ஆபீசை காலி செய்து கொண்டிருக்க அப்போது அங்கு வரும் தயாரிப்பாளரின் மகள் அவர்களிடம் பேசி எழிலை சைட் அடிக்கிறார். ஷாப்பிங் முடிந்து வீட்டுக்கு வந்ததும் கோபி மற்றும் ராதிகா என இருவரும் கல்யாண விஷயம் பற்றி பேசி சந்தோஷப்பட அப்போது கோபி இந்த விஷயத்தை அம்மாவிடம் சொல்லலாம் என இருக்கிறேன் என கூறுகிறார். எப்படி இருந்தாலும் நம்ம கல்யாண விஷயம் அவங்களுக்கு தெரியதான் போகுது அதை நானே சொல்லலாம் என்று நினைக்கிறேன் என சொல்ல ராதிகா சொல்றது சரியா வருமானு யோசிச்சு சொல்லுங்க என கூறுகிறார்.

பிறகு ராதிகாவை சமாதானம் செய்யும் கோபி சொல்றதால எந்த பிரச்சினையும் வராது அப்படியே அவங்க எது செய்தாலும் இந்த கல்யாணம் நிச்சயமாக நல்லபடியாக நடக்கும் என உறுதி கொடுக்கிறார். பிறகு அம்மாவுக்கு போன் போட்டு உங்களை பார்த்து பேச வேண்டும் பொன்னியம்மன் கோவிலுக்கு வரேன். நீங்களும் வந்துருங்க என கூறுகிறார். இந்த பக்கம் பாக்கியா மற்றும் ஜெனி கல்யாண மண்டபத்திற்கு செல்ல அங்கு ராதிகாவின் அண்ணன் உங்க வீட்டு கல்யாணம் மாதிரி நல்லபடியா சமைச்சு கொடுங்க, சாப்பாடு ரொம்ப அருமையா இருக்கணும் என கூறுகிறார். பாக்கியா கண்டிப்பா நல்லபடியா சமைச்சு தரோம் என வாக்கு கொடுக்கிறார்.

கல்யாண விஷயத்தை சொல்ல அம்மாவை சந்திக்கும் கோபி.. ராதிகா சொன்ன வார்த்தை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

வீட்டில் ஒரே யோசனையில் இருக்கும் ஈஸ்வரியை எல்லோரும் என்னாச்சு வழக்கமா நீங்க இன்னைக்கு கோவிலுக்கு போவீங்க போகலையா என கேட்க அப்போது அவருக்கு கோபி வர சொன்ன விஷயம் ஞாபகத்துக்கு வர உடனே கோவிலுக்கு கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.