ராதிகாவை ஏமாற்றியுள்ளார் கோபி. இன்னொரு பக்கம் இனியா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட் கிச்சனில் பாக்கியா செழியன் மற்றும் எழில் என மூவரும் உக்காந்து பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அங்கு வரும் இனியா பாக்யாவை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்து உங்க எல்லாருக்கும் ஒரு ஹேப்பியான நியூஸ் என்ன சொல்கிறார்.

மூவரும் ஆர்வத்தோடு என்ன விஷயம் என கேட்க இனியா எங்க ஸ்கூல்ல 12thல நல்லா படிக்கிற அஞ்சு ஸ்டூடண்ட்டை ஸ்பெஷல் கோச்சிங் கிளாஸ்க்கு தேர்வு செஞ்சிருக்காங்க, அதுல நானும் ஒரு ஆள் இப்பதான் மேடம் போன் பண்ணி சொன்னாங்க என்று சொல்ல எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். ‌‌‌

அதன் பிறகு மேலும் நாளைக்கு ஒரு பங்க்ஷன் வச்சி அதுல எங்க நேம் எல்லாத்தையும் பண்ண போறாங்க, அதுக்காக பேரன்ஸோட வரணும்னு சொல்லி இருக்காங்க என்று சொல்கிறார். பாக்கியா கண்டிப்பா நான் வரேன் என சொல்ல செடியன் மற்றும் எழிலும் நாங்களும் வருவோம் என சொல்கின்றனர். இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை கோபி மறைந்திருந்து கேட்டு அவரும் சந்தோஷப்படுகிறார்.

பிறகு இனியா சோபாவில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருக்க வாக்கிங் சென்று வரும் கோபி இனியாவிடம் பேசி வாழ்த்து சொல்லி என்ன விஷயம் என விசாரிக்க இனியா பெருசாக ரெஸ்பான்ஸ் எதுவும் பண்ணாமல் கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

அதன் பிறகு மறுநாள் எல்லோரும் ஸ்கூலுக்கு வர இனியா பாக்யாவை எல்லோரிடமும் அறிமுகம் செய்து வைக்கிறார். இன்னொரு பக்கம் கோபி காரில் இனியாவின் ஸ்கூலுக்கு வந்து கொண்டிருக்க அந்த நேரம் ராதிகா போன் செய்து மயூவை ரொம்ப மிஸ் பண்றதா சொல்றா, அவளோட வெளியே எங்கேயாவது போகலாம் வாங்க என கூப்பிட கோபி முக்கியமான மீட்டிங் விஷயமா போயிட்டு இருக்கேன் என பொய் சொல்லி நம்ப வைக்கிறார்.

பிறகு ஸ்கூலில் பங்க்ஷன் தொடங்கி ஒவ்வொருத்தர் பெயராக அறிவிக்க தொடங்குகின்றனர். இனியாவின் பெயரை கூப்பிட்டு நடையில் ஏற்ற பாக்கியா பின்னாடி நின்று பார்க்கும் கோபி என எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.

அதன் பிறகு மேடம் இனியா முதலில் ஆவரேஜ் ஸ்டூடண்டா தான் இருந்தா, நிறைய குறும்புத்தனம் பண்ணி பேரன்ட்ஸ் எல்லாம் ஸ்கூலுக்கு வர வச்சிருக்கா, ஆனால் இப்படி திடீர்னு படிக்க ஆரம்பிச்சு ஸ்டேட் மார்க் வாங்குற அளவுக்கு வளர்ந்து இருப்பது ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கு என பாராட்டி பேசுகிறார்.

பிறகு இனியாவிடம் ஏதாவது பேசு என மைக் கொடுக்க இனியா என்ன பேசுவது என தயக்கத்தோடு இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.