பாக்யாவை அவமானப்படுத்த போய் அசிங்கப்பட்டுள்ளார் ராதிகா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடு இனியா சரனுடன் பாக்கியா வீட்டுக்கு சாப்பிட வர ஜெனி அமிர்தா என எல்லோரும் அவளை வரவேற்க இனியா சரணை அறிமுகம் செய்து வைக்கிறார்.

அடுத்து ஈஸ்வரி வர இது என்னுடைய பாட்டி என சொல்ல சரண் என்னது பாட்டியா பாக்க ரொம்ப யங்காக இருக்காங்க என சொல்ல ஈஸ்வரி வெட்கப்படுகிறார். அடுத்து ஈஸ்வரி சரணிடம் நீ எந்த ஏரியா ஒரே ஸ்கூலா என விசாரிக்கிறார். பிறகு சரண் என் அப்பா பேங்க்ல வேலை பார்க்கிறார் என சொல்ல ஈஸ்வரி என் பையனும் பேங்க் விஷயமா தான் வேலை செய்கிறான் என சொல்கிறார். உடனே சரண் ஆனா அவர் வேற வீட்ல இருக்காரு அவர பாக்கணும்னா ஒரு நாள் டின்னருக்கு போகணும் என இனியா சொன்னதாக விஷயத்தை சொல்ல ஈஸ்வரி முகம் மாறுகிறது.

அடுத்து இனியா பாக்யாவிடம் வந்து அம்மா உனக்கு என் மேல கோபம் இல்லையே என கேட்க உன் மேல எனக்கு எந்த கோபமும் இல்லை நீ உன்னுடைய பிரண்ட்ஸை வீட்டுக்கு எப்ப வேண்டுமானாலும் கூட்டிட்டு வரலாம். ஆனா அவங்க பிரண்டா மட்டும்தான் இருக்கணும், நீ உன்னுடைய கவனத்தை படிப்பில் மட்டும் செலுத்தி நல்லா படிச்சு நல்ல வேலைக்கு போகணும் என சொல்ல இனியா கண்டிப்பா நல்லா படிப்பேன் என வாக்கு கொடுக்கிறார்.

அதன் பிறகு ராதிகா வீட்டில் இனியா வரவில்லை என ராதிகா வாசலையே பார்த்துக் கொண்டிருக்க கோபி வந்ததும் விஷயத்தை சொல்ல ராமமூர்த்தி இனியா பாக்யா வீட்ல தான் இருக்கா என சொல்ல ராதிகா என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல என சொல்கிறார். அதான் என்கிட்ட சொல்லிட்டாளே நீ என்கிட்ட கேட்டு இருந்தா நான் சொல்லி இருக்க போறேன் என ராமமூர்த்தி பதில் கொடுத்து பிறகு நான் போய் இனியாவை கூட்டிட்டு வரேன் என கிளம்பி வருகிறார்.

இதனால் கோபமாகும் ராதிகா இந்த வீட்ல எனக்கு என்ன மரியாதை இருக்கு? உங்க அம்மாவும் அப்பாவும் என்னதான் மருமகள்னு சொல்லணும் இனியா எனக்கு மரியாதை கொடுக்கணும் அப்படி இல்லன்னா நான் இந்த வீட்ல இருக்க மாட்டேன், நீங்க தான் இதெல்லாம் செய்ய வைக்கணும் என கோபியிடம் சொல்லி கோபமாக உள்ளே செல்கிறார் ராதிகா.

அடுத்து பாக்யா கேண்டினில் வேலை செய்து கொண்டிருக்க அப்போது அங்கு வரும் ராதிகா உங்க சாப்பாடு சரியில்லன்னு நிறைய கம்ப்ளைன்ட் வருது என சொல்லி எல்லாத்தையும் செக் செய்ய சாப்பாடு எல்லாம் நல்லா தான் இருக்கும் கம்ப்ளைன்ட் எதுவும் வர வாய்ப்பில்லை நாங்க சாப்பிட வர எல்லார்கிட்டயும் சாப்பாடு பத்தி கேட்டுட்டு தான் இருக்கோம் என பாக்கியா பதில் கொடுக்கிறார்.

பிறகு ராதிகா அப்படியா இங்க இருக்கவங்க கிட்ட சாப்பாடு பத்தி கேட்கலாமா என சொல்ல பாக்கியா தாராளமா கேளுங்க, ஒருத்தர் சாப்பாடு நல்லா இல்லைன்னு சொன்னா கூட நான் உங்களுடைய கம்ப்ளைன்ட்டை ஏத்துக்கிறேன் என சொல்கிறார். பிறகு ராதிகா சாப்பாடு பற்றி விசாரிக்க எல்லோரும் ஆகா ஓகோ என பாராட்டி பேச பாக்கியா போதுமா வேணும்னா இன்னொரு முறை போய் ஈமெயில நல்லா படிச்சு பாருங்க, இமெயில் படிக்க தெரியுமா என கேட்டு ராதிகாவுக்கு பல்பு கொடுக்க அசிங்கப்பட்டு அங்கிருந்து நகர்கிறார் ராதிகா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.