வீட்டில் உண்மையை மறைக்க இனியா செய்த வேலையால் பாக்யாவுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனிய ஸ்கூல் பேரன்ஸ் கட்டாயம் வர வேண்டும் என சொல்ல என்ன செய்வது என தெரியாமல் ஆபீஸிலிருந்து கோபிக்கு போன் போட்டு விஷயத்தை சொல்ல கோபி வந்து பிரின்சிபலிடம் பேசுகிறார். அவர் கடும் கோபமாக பேசி இதுதான் கடைசி வார்னிங் இனியும் இப்படி நடந்தால் டிசி தான் கொடுப்பேன் என எச்சரித்து அனுப்புகிறார். இனியா அப்பாவுக்கு நன்றி சொல்லிவிட்டு கிளாசுக்கு போகிறார்.

வீட்டில் உண்மையை மறைக்க இனியா செய்த வேலை.. பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்ததாக பாக்கியா அமிர்தாவுக்கு போன் போட்டு நடந்த விஷயங்கள் பற்றி பேசி ஆறுதல் கூறுகிறார். பின்னர் வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது இனியாவின் தோழி நிகிலாவின் அம்மா பாக்யாவுக்கு போன் போட்டு நீங்க ஸ்கூலுக்கு வரலையா பிரின்சிபல் வர சொல்லியிருந்தார்களே என நடந்த விஷயத்தை சொல்ல பாக்கியா அதிர்ச்சியாகி ஸ்கூலுக்கு செல்கிறார்.

வீட்டில் உண்மையை மறைக்க இனியா செய்த வேலை.. பாக்யாவுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அங்கே பள்ளி முதல்வரை சந்தித்து பேசிக் கொண்டிருக்க அப்போது கோபி வந்து பேசிட்டு போன விஷயத்தை சொல்ல அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.