அமிர்தா கொடுத்த ஷாக்கால் எழில் கண்கலங்கி நிற்கிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் எழில் ஒரு பக்கம் அமிர்தா ஒரு பக்கம் எழில் என இருவரும் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க எழில் நடந்ததை நினைத்து கண்கலங்க அப்போது பாக்கியா என்னாச்சு என கேட்க நடந்ததை கூறுகிறார். பின்னர் பாக்யா கொஞ்சம் பொறுமையா இரு உனக்கு இப்போதைக்கு கல்யாணம் பண்ண போறது இல்ல அமிர்தாவுக்கும் அவங்க கல்யாணம் பண்ணி வைக்கப் போறது இல்ல கண்டிப்பா நீங்க ஒன்னு சேருவீங்க என கூறுகிறார்.

அமிர்தா கொடுத்த ஷாக்.. கலங்கி நிற்கும் எழில்.. வர்ஷினி போட்ட சபதம் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து இனியா ஸ்கூலுக்கு போகல தலை வலிக்குது என நாடகம் போட பாக்கியா திட்டி ஸ்கூலுக்கு அனுப்பி வைக்கிறார். பின்னர் ஜெனியின் அம்மா வீட்டுக்கு வந்து ஜெனியை பார்த்துவிட்டு ஒரு வாரம் கூட்டிட்டு போய் எங்க வீட்டுல வச்சிருந்து அனுப்பறேன் என சொல்ல செழியன் இங்கேயே இருக்கட்டும் என சொல்ல ஈஸ்வரியும் வளைகாப்பு முடிந்து உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போங்க அதுவரைக்கும் இங்கேயே இருக்கட்டும் என கூறுகிறார்.

ஸ்கூலில் இனியா மட்டும் பேரன்ஸ் கூட்டிட்டு வராமல் இருக்க ஈவினிங்க்குள்ள பேரன்ஸ் வரணும் இல்லைனா டிசி வாங்கிட்டு போயிடு என சொல்ல இனியா அழுகிறாள்.

பிறகு ஆபீஸில் எழில் அமிர்தாவை பற்றி யோசித்துக் கொண்டிருக்க சதீஷ் போன் போட்டு என் ஆபிசுக்கு வரவில்லை என கேட்க வர முடியுமான்னு தெரியல என்னுடைய சூழ்நிலை அப்படி இருக்கு என அதிர்ச்சி கொடுக்கிறார். பிறகு வர்ஷினி எழிலிடமிருந்து உங்களை நெருங்கி நெருங்கி வர நான் வேணான்னு சொல்லிட்டு விலகி போற அமிர்தாவை தேடுறீங்க என பேச என்னுடைய பர்சனல் வாழ்க்கைக்குள்ள தலையிடாதீங்க படத்தை பற்றி ஏதாவது பேசணும்னா பேசுங்க என சொல்லி வெளியே கிளம்பி விடுகிறார்.

அமிர்தா கொடுத்த ஷாக்.. கலங்கி நிற்கும் எழில்.. வர்ஷினி போட்ட சபதம் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு சதீஷிடம் எனக்கும் எழிலுக்கும் தான் கல்யாணம் நடக்கும் என சொல்ல அதுக்கு வாய்ப்பே இல்லை என கூறுகிறார். படம் நடக்குமானு தெரியல என சொல்ல படமும் நடக்கும் கல்யாணமும் நடக்கும் என சபதம் எடுக்கிறாள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.