கல்யாண பேச்சு பேசும்போது கோபி சொன்ன வார்த்தையால் ராதிகா குடும்பம் அப்செட்டாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஜெனி வேலைக்கு போக போவதாக சொல்ல பாக்கியா உடனே ஜெனியை கட்டிப்பிடித்து நீ வேலைக்கு போறது நல்ல விஷயம் என கூறுகிறார். ஆனா வெளியில வேலைக்கு போறதுக்கு பதிலா நீ என்னோட கேட்டரிங் சர்வீச பாத்துக்கோ இந்த ஆர்டர் நமக்கு கண்டிப்பா கிடைக்கும்னு நினைக்கிறேன் மத்த இடங்கள்ல ஆர்டர் பேசுறது சம்பளம் பேசுறது இதையெல்லாம் நீ பார்த்துக்கோ என சொல்ல ஜெனியும் எனக்கு டபுள் ஓகே என கூறுகிறார்.

கல்யாண பேச்சு பேசும்போது கோபி சொன்ன வார்த்தை.. அப்செட்டான ராதிகா குடும்பம்.. கோபிக்கு காத்திருக்கும் ஆப்பு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

இந்த பக்கம் ராதிகா வீட்டில் கல்யாணம் பத்திரிக்கை ரெடி ஆகி வீட்டுக்கு வர எல்லோரும் அதை பார்த்து சந்தோஷப்பட அந்த நேரத்தில் கோபியும் வருகிறார். அவரும் கல்யாண பத்திரிகை பார்த்துவிட்டு ரொம்ப சந்தோஷமா இருக்கு என சொல்ல பிறகு துணியை எப்போ எடுப்பது எங்கே எடுப்பது என ராதிகாவின் அம்மா கேட்கிறார். கோபி எனக்கு நானே எடுத்துக் கொள்கிறேன் என சொல்ல உங்களுக்கு நாங்க தான் எடுக்கணும் ராதிகாவுக்கு முகூர்த்த புடவை நீங்க எடுக்கணும் எல்லாரும் ஒன்னா சேர்ந்து போய் எடுக்கணும் அதுதான் ஐதீகம் என கூறுகிறார்.

அப்போது மயூரா எனக்கு பட்டு பாவாடை வேண்டும் என கேட்க உனக்கு என்ன வேணுமோ அதை எடுத்துக்க என எல்லோரும் கூறுகின்றனர். அந்த நேரத்தில் கோபி இனியாவுக்கும் ஒரு டிரஸ் எடுக்கணும் என ஆர்வமாக சொல்ல அதைக் கேட்ட எல்லோரின் முகமும் மாறுகிறது. ராதிகா அதுக்கு என்ன தாராளமா எடுக்கலாம் நானே செலக்ட் பண்ணி கொடுக்கிறேன் நீங்க இனியா கிட்ட கொடுத்துடுங்க என கூறுகிறார்.

இந்தப் பக்கம் பாக்யா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது கல்யாண ஆர்டருக்காக போன் வருகிறது. அடுத்த வாரம் ஒரு கல்யாணம் இருக்கு, அதுக்கு நீங்கதான் சமைக்கணும் என சொல்ல பாக்கியா கண்டிப்பாக சமைக்கிறேன் என வாக்கு கொடுக்கிறார்.

கல்யாண பேச்சு பேசும்போது கோபி சொன்ன வார்த்தை.. அப்செட்டான ராதிகா குடும்பம்.. கோபிக்கு காத்திருக்கும் ஆப்பு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அதன் பிறகு ராதிகா வீட்டில் இருந்து கோபி கிளம்பியதும் ராதிகாவின் அம்மா கோபமாக இருக்க ராதிகா என்னாச்சு என கேட்க உன் வாழ்க்கையில நீயே மண்ணள்ளி போட்டுக்காத, கோபியை முழுசா உன் பக்கம் வச்சுக்க. இங்க பாதி அங்க பாதினு இருக்கக் கூடாது அப்புறம் கோபி கைய விட்டுப் போகும் போது உன்னால இழுத்துப் பிடிக்க முடியாது என கூறுகிறார். இதனால் கோபி அவருடைய குடும்பத்தாரிடம் பேசுவதை அடியோடு நிறுத்த வேண்டும் என கண்டிஷன் போடவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.