ராதிகாவால் மீண்டும் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி பாரில் தனியாக அமர்ந்து சரக்கு அடித்துக் கொண்டிருக்க அப்போது செந்தில் அங்கு வர நான் உன்னை எப்போ வர சொன்னா நீ எப்போ வர என கோபி திட்டுகிறார்.

அதற்கு செந்தில் வீட்ல இருந்தேன் டா, வேலையே இருக்காதா என கேட்க கோபி வீட்ல உட்கார உனக்கு அன் கம்ஃபர்டபுலா இல்லையா என கேட்கிறார். ஏன்டா ஏன் இப்படி எல்லாம் பேசுற என கேட்க என்ன பண்றது என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சு என கோபி புலம்புகிறார்.

கல்யாணத்துக்கு முன்னாடி வரைக்கும் ராதிகா ரொம்ப நல்லா பேசினா வாங்க கோபி உக்காருங்க கோபி சாப்பிடுங்க கோபி ஏதாவது ஸ்பெஷலா பிரப்பர் பண்ணட்டுமா எனக்கு நீங்க மட்டும் போதும் கோபி என டயலாக் எல்லாம் விட்டா ஆனால் இப்போ சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் சண்டை போடுறா.

பாக்கியா அவ ஆபீஸ்ல கேண்டீன் திறந்ததை, திட்டம் போட்டு துறந்ததா சொல்றா, அதுக்கு நான் என்னடா பண்ண முடியும்? இவ அந்த கேன்டீன் திறப்பு விழாவுக்கு ஒரே ஆபீஸ்ல வேலை பண்றதால போக வேண்டிய சூழ்நிலை. அங்கே என் அம்மாவும் அப்பாவும் வந்தாங்க அவங்க எதுக்கு வந்தாங்க அவங்களுக்கு நான் தான் மருமக, அத அவங்க வாயால சொல்ல வைக்கணும்னு சொல்றா.. அதெல்லாம் எப்படி முடியும்? நாங்க என்ன சின்ன வயசுல ஓடிப்போய் கல்யாணம் பண்ணிக்கிட்டு பெத்தவங்க ஏத்துப்பாங்கனா காத்துகிட்டு இருக்கோம் என புலம்பி தள்ளுகிறார்.

அடுத்து வீட்டுக்கு வரும் கோபி நைஸாக யாருக்கும் தெரியாமல் ரூமுக்குள் போய்விடலாம் என நினைக்க ராதிகாவிடம் மாட்டிக் கொள்கிறார். ராதிகா சாப்பிட்டீங்களா என கேட்க நல்லா சாப்பிட்டேனு கோபி சொல்ல வெளியில் சாப்பிட்டால் சாப்பிட்டேன் என்று சொல்ல மாட்டீங்களா என ராதிகா சத்தம் போடுகிறார். இனிமே கண்டிப்பா சொல்றேன் என கோபி பதில் சொல்கிறார்.

அடுத்து சரி வந்து படுங்க என சொல்ல நீ போய் தூங்கு ராதிகா ஃப்ரெஷ் ஆகிட்டு வரேன் எனக்கு ஒரு பெட்ஷீட் மட்டும் கொடு நான் இங்கேயே படுத்துக்குறேன். ஏன்னா உள்ள வந்தா லைட்டு போடணும் டிரஸ் கழட்டனும் டிரஸ் மாத்தணும், மயூ தூங்குரா அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என சொல்ல ராதிகா கோபியின் நடவடிக்கையில் சந்தேகப்படுகிறார். பிறகு பெட்ஷீட் எடுத்து வந்து கொடுக்க தப்பிச்சேன்டா சாமி என கோபி படுத்து கொள்கிறார்.

மறுபக்கம் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் கிளம்ப வழியில் ஈஸ்வரி உட்கார்ந்திருக்க வழக்கம் போல ஈஸ்வரிக்கு ஐஸ் வைத்து கிளாசுக்கு கிளம்பிச் செல்கிறார். கிளாசுக்கு வந்ததும் பழனிச்சாமி இங்க சாப்பாடு ரொம்ப சூப்பரா இருந்தது அதுவும் அந்த சாம்பார் வேற லெவல். கண்டிப்பா நீங்க வாழ்க்கையில் பெரிய இடத்துக்கு வருவீங்க என பாராட்டுகிறார்.

அடுத்து பாக்கியா அவருக்கு நன்றி சொல்கிறார் மேலும் பழனிச்சாமி கோயம்புத்தூர்ல எங்க வீட்டுல எந்த பங்க்ஷன் நடந்தாலும் உங்களுடைய சமையல் தான், உங்கள பிளைட்ல கூட்டிட்டு போயாவது சமைக்க வைப்பேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.