பாக்யாவுக்கு ராஜசேகர் இன்ப அதிர்ச்சி கொடுக்க ராதிகா அவமானப்பட்டுள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் தேர்தலில் பாக்யாவை ஜெயிக்க வைக்க தாத்தா இராமமூர்த்தி பிரச்சார வசனங்களை எழுதிக் கொண்டிருக்க அப்போது வரும் கோபி இந்த வீட்டில் உக்காந்துட்டு உங்க மருமகள் ஜெயிக்கணும்னு முயற்சி பண்ணிட்டு இருக்கீங்க அவ ஜெயிக்கனும்னு நினைச்சா அங்க போய் பண்ணுங்க என கையில் இருந்த நோட்டைப்பிடுங்கி தூக்கியெடுக்கிறார்.

பாக்யாவுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி.. கோபியால் அவமானப்பட்ட ராதிகா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

பிறகு ராதிகா நீ ஒன்னும் கவலைப்படாத கண்டிப்பா நீ தான் ஜெயிப்ப என சொல்லிவிட்டு ஆபீஸ்க்கு கிளம்ப இனியா அம்மா தான் ஜெயிப்பாங்க என்ன சொல்ல ராதிகா உங்க டாடி இருக்க வரைக்கும் அவருக்கு ஃபேவரா பேசிட்டு இப்போ மாத்தி பேசுற என கேட்க இனிய நான் எங்க அம்மா எங்க அப்பா ரெண்டு பேருக்கும் பேவர் தான் என கூறுகிறார்.

அடுத்து பாக்கியா ராஜசேகரை சந்தித்து தனக்கு பணம் கிடைக்கவில்லை அதனால் இந்த ஆர்டரை எடுத்து செய்வது கஷ்டம் என சொல்லி மன்னிப்பு கேட்க அவர் தொழிலில் எப்போதும் முன் வைத்த கலை பின் வைக்கக் கூடாது உங்களுக்கு பணம் தானே பிரச்சனை? நான் உங்களுக்காக கையெழுத்து போட்டா உங்களுக்கு லோன் கிடைக்கும் இல்ல என சொல்ல பாக்கியா சந்தோஷப்பட்டு அவருக்கு நன்றி கூறுகிறார். அவரும் வாழ்க்கையில் நல்லபடியா ஜெயிக்கணும் என வாழ்த்துக்கூறி அனுப்பி வைக்கிறார்.

பாக்யாவுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி.. கோபியால் அவமானப்பட்ட ராதிகா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அதன் பின்னர் ஏரியா செக்ரட்டரி எலக்சனுக்காக எல்லோரும் ஒன்று கூடி இருக்க பிறகு தேர்தல் தொடங்குகிறது. கிட்டத்தட்ட 800 குடும்பங்கள் உள்ள ஏரியாவின் ஓட்டு போடும் நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடக்கிறது பிறகு ஓட்டை எண்ணும் போது முதலில் ராதிகா 112 ஓட்டுக்கள் பெற்றிருப்பதாக சொல்ல கோபி கைதட்டி சந்தோஷப்படுகிறார்.

ராதிகா ஓட்டு ரொம்ப கம்மியா இருக்க மாதிரி தெரியுது என சொல்ல இல்ல உன்ன விட கம்மியா தான் வாங்கி இருப்பா நீ தான் ஜெயிப்ப என சொல்ல அடுத்து பாக்கியா 1100க்கும் அதிகமான ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்று இருப்பதாக அறிவிக்க கோபி அதிர்ச்சி அடைகிறார். இல்ல ஏதோ தப்பு நடந்து இருக்கு நீங்க ஓட்ட சரியா எண்ணல ராதிகா தான் ஜெயிச்சு இருக்கணும் என கோபி சத்தம் போட அதெல்லாம் சரியாத்தான் எண்ணி இருக்கோம் என ஓட்டு எண்ணிய அதிகாரி பதில் கொடுக்கிறார்.

பாக்யாவுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி.. கோபியால் அவமானப்பட்ட ராதிகா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அதன் பிறகு பாக்யாவை மேடைக்கு கூப்பிட்டு சால்வை அணிவித்து அவரை பேச சொல்கின்றனர். எனக்காக ஓட்டு போட்டு என்னை ஜெயிக்க வைத்த உங்க எல்லோருக்கும் நன்றி என பாக்யா நன்றி கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.