ஜெனி எடுத்த முடிவுக்கு செழியன் எதிர்பாராத அதிர்ச்சி கொடுத்துள்ளான்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் எழில் அமிர்தாவுக்கு போன் போட அப்போது அவர் அப்பா அம்மா இருவரும் உங்க அப்பா அம்மா விவாகத்துக்கு வாங்கின விஷயத்தை நினைச்சு அப்செட்ல இருக்காங்க. இந்த சூழ்நிலையில நம்ம கல்யாணம் தேவையான நனைக்கிறாங்க என சொல்ல இன்னும் எங்க அப்பா பொண்ணு தப்பால வீட்ல எல்லாருக்கும் தனித்தனியாக பிரச்சனை அவருடைய சந்தோஷத்துக்காக எங்க எல்லாருடைய நிம்மதியைதையும் அழிச்சிட்டாரு என புலம்புகிறார்.

ஜெனி எடுத்த முடிவு.. செழியன் கொடுத்த அதிர்ச்சி, கோபியின் திருமண விஷயத்தில் பாக்யாவுக்கு காத்திருக்கும் பெரும் சிக்கல் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கீழே இறங்கி வரும்போது செழியன் அமிர்தா கிட்ட எதுக்கு நம்ம வீட்டை பத்தி சொல்லி மானத்தை வாங்குற என கேட்க அப்பா பண்ணதால போகாத மானம் நான் சொன்னதால போயிடுச்சா என பதிலடி கொடுக்கிறார். அப்பா எவ்வளவு விஷயம் செஞ்சிருக்காரு என கோபிக்கு ஆதரவாக செழியன் பேச எழில் அதற்கு ஏற்றார் பல பதிலடி கொடுத்துவிட்டு நகர்கிறார்.

இதனை அடுத்து இனியா கோபிக்கு போன் போட்டு சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் பாக்கியா உள்ளே வர வேண்டும் என்றே அவளை வெறுப்பேற்றுவது போல பேசுகிறார். பின்னர் கோபி ராதிகாவை சந்தித்து இந்த நாளுக்காக இவ்வளவு நாள் காத்திருந்தேன் என ரொமான்டிக்காக பேச ராதிகாவும் சந்தோஷப்படுகிறார்.

ஜெனி வேலைக்கு போகலாம் என முடிவெடுத்து இருப்பதாக சொல்ல செழியன் அதெல்லாம் ஒன்றும் தேவையில்லை அம்மா இந்த குடும்பத்தை மொத்தமா நானே பாத்துக்கிறேன் சவால் விட்டார்கள். பார்க்கட்டும் அப்போதான் அவங்களுக்கு கஷ்டம் தெரியும் என செழியன் அதிர்ச்சி கொடுக்குறான்.

ஜெனி எடுத்த முடிவு.. செழியன் கொடுத்த அதிர்ச்சி, கோபியின் திருமண விஷயத்தில் பாக்யாவுக்கு காத்திருக்கும் பெரும் சிக்கல் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு கோபியும் ராதிகாவின் அண்ணனும் சேர்ந்து சென்று ராஜசேகர் அவர்களின் மினி ஹாலை கல்யாணத்துக்காக புக் செய்கின்றனர். இந்த பக்கம் பாக்கியா எப்படியாவது இந்த கேட்டரிங் ஆர்டர் கிடைக்க வேண்டும் என செல்வியிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது ஜெனி வருத்தமாக வந்து நிற்க பாக்கியா என்னாச்சுனு கேட்க வேலைக்கு போக முடிவெடுத்து இருப்பதாக கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.