கோபி பேசிய பேச்சுக்கு எழில் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பாக்யாவை நிற்க வைத்து இனி உனக்கு இந்த வீட்டில் இடம் இல்லை வெளியே போ என சத்தம் போடுகிறார்.

கோபி பேசிய பேச்சுக்கு எழில் கொடுத்த பதிலடி.. பாக்கியா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதுமட்டுமல்லாமல் ஈஸ்வரி இனியா ஜெனி செழியன் என எல்லோரும் பாக்யாவை இங்கேயே இருக்குமாறு கூறுகின்றனர். ஆனால் கோபி அனைவரையும் அமைதியாக இருக்க சொல்லி இனி அவளை இந்த வீட்டில் இருப்பதாக சொன்னாலும் அதற்கு நான் விடமாட்டேன். இனிய வீட்ல இருக்க கூடாது வெளியே போ என கூறுகிறார். உடனே எழில் அம்மா ஒன்னும் இந்த வீட்ல இருக்கறதுக்காக வரல அவங்களுடைய பொருட்களை எடுக்க வந்திருக்காங்க என சொல்ல அவளுடைய பொருளா அப்படி என்ன இருக்கு இந்த வீட்டில எல்லாமே என்னோட காசுல வாங்குனது என கோபி கூறுகிறார்.

உடனே எழில் நீங்க திருந்தவே மாட்டீங்களா? அம்மா நீ போய் புடவையை மட்டும் எடுத்துக்கிட்டு வாய் என சொல்லி அனுப்பி வைக்கிறார். பாக்கியா மேலே போக இனிய என்னை பத்தி கூட யோசிக்கலயா நான் கூட உனக்கு வேண்டாமா நீ இல்லாம எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என அழுகிறார்.

பிறகு மேலே போன பாக்யா புடவைகளை எடுத்துக் கொண்டிருக்க கீழே செழியன் பேசிய தாத்தாவிடம் எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் தான் என பேசுகிறார் அதனால் தான் இவ்வளவு ஆட்டம் போடுறாங்க என சொல்ல எழில் யாரு ஆட்டம் போடுறது? அப்பா அம்மா பிள்ளைகளுக்கு முன்னுதாரணமாய் இருக்கணும். நம்ம அப்பா வீட்டுல பொண்டாட்டி இருக்கும் போதே இன்னொரு லேடி யோட ரிலேஷன்ஷிப் வச்சிக்கிறது சரியா? நம்ப அப்பா நமக்கு காட்டுன உதாரணம் இதுதானா.? அப்போ நாங்களும் இப்படி வேற பொண்ணோட ரிலேஷன்ஷிப் வெச்சுக்கலாமா? என்ன விடு எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல உனக்கு கல்யாணம் ஆகிவிட்டது நீ ஜெனியை விட்டுட்டு இன்னொரு பொண்ணோட ரிலேஷன்ஷிப் வெச்சுகிட்டா அது ஜெனி ஏத்துப்பாங்களா என்ன பதிலடி கொடுக்கிறார்.

கோபி பேசிய பேச்சுக்கு எழில் கொடுத்த பதிலடி.. பாக்கியா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

நீங்க எல்லோரும் இப்படி பாக்யா கிட்ட கெஞ்சுறதுக்கு எந்த அவசியமும் இல்லை அவர் இந்த வீட்டில செல்வி அப்படியே ஒரு சமையல் காரியத்தை இத்தனை வருஷமா இங்க இருந்தா. ஜஸ்ட் அஞ்சாயிரம் சம்பளம் கொடுத்தா அந்த இடத்தை நிரப்புவதற்கு வேற ஒருத்தி வருவா என கூறுகிறார்.

கீழே இறங்கி வந்த பாக்யாவிடம் ஈஸ்வரி கோபி ஒரு தப்பு பண்ணா நீ ஒரு தப்பு பண்ணி இந்த குடும்பத்தை உடைச்சிட்ட. ரெண்டுல ஒரு முடிவு எடுக்க எடுக்கும் நலம் ஓவர் தின பொறுமையா இருந்து யோசிச்சு முடிவெடுக்கணும். நீ உன் சுயநலத்துக்காக முடிவெடுத்து இருக்க என சொல்கிறார். இதையெல்லாம் கேட்டு பாக்கியா அமைதியாகவே இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.