கோபிக்கும் ராதிகாவுக்கும் திருமணத்தை கோலாகலமாக நடத்த குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா வெளியே சென்று இருப்பதால் ஜெனி சமைத்துக் கொண்டு இருக்க அங்கு வரும் ஈஸ்வரி பாக்யா வீட்டில் இல்லாததை பார்த்து திட்டுகிறார்.

கோபிக்கும் ராதிகாவுக்கும் ஜாம் ஜாம்னு திருமணம் நடத்த முடிவெடுத்த குடும்பம்.. ஈஸ்வரி கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

இந்த பக்கம் ராதிகாவின் அண்ணனும் அம்மாவும் கோபியை வர வைத்து கல்யாணத்துக்கு நாள் குறிச்சாச்சு என சொல்லி கல்யாணத்தை வெகு விமர்சையாக நடத்த வேண்டும் என கூறுகின்றனர். கோபி அதெல்லாம் எதுக்கு சாதாரணமா ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கலாம் என சொல்ல இல்ல நீங்க இங்க வந்து போறதால எங்க குடும்ப இமேஜ் டேமேஜ் ஆகிடுச்சு. உங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் ஒவ்வொருத்தரா வந்து சத்தம் போட்டு தெரு முழுக்க தப்பா பேசறாங்க. அப்படி பேசுறவங்க வாயெல்லாம் அடைக்க இந்த கல்யாணம் கிராண்டா நடக்கணும் என கூறுகின்றனர். பிறகு கோபியும் சரியென சம்மதம் சொல்லி விடுகிறார்.

அடுத்ததாக பாக்யா வீட்டுக்கு வந்து கேட்டரிங் ஆர்டர் தனக்கு கிடைத்து விட்டதாக மகிழ்ச்சியாக சொல்ல ஈஸ்வரி வழக்கம்போல வாழ்க்கையில தோத்துட்ட இப்ப எதைத்தேடி இருட்டில் அலைஞ்சுகிட்டு இருக்க? ஏளனமாக பேசுகிறார். எனக்கு வாழ்க்கையே இப்பதான் ஆரம்பிச்ச மாதிரி இருக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு என பாக்கியா ஈஸ்வரிக்கு பதிலடி கொடுக்கிறார்.

கோபிக்கும் ராதிகாவுக்கும் ஜாம் ஜாம்னு திருமணம் நடத்த முடிவெடுத்த குடும்பம்.. ஈஸ்வரி கொடுத்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

அடுத்ததாக ராதிகா கல்யாணம் குறித்து சிந்தனையில் இருக்க அப்போது அண்ணனும் அம்மாவும் எதுக்கு இப்படி இருக்க என கேட்க மயூவை வைத்துக்கொண்டு நான் கல்யாண மேடையில் உட்கார்ந்தால் நல்லா இருக்குமா அதுதான் யோசிச்சுட்டு இருக்கேன் என சொல்ல அந்த நேரத்தில் மயூ வர இருவருக்கும் கல்யாணம் நடக்க போவதாக பாட்டி விஷயத்தை சொன்னதைக் கேட்டு ரொம்ப சந்தோஷப்படுகிறார். இதனால் ராதிகாவும் சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.