ஈஸ்வரி கொடுத்த அதிர்ச்சியை தொடர்ந்து ராதிகாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பாக்யா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் கோபி அம்மாவை சந்தித்து விட்டு காரில் வந்து ஏற திடீரென ஓடிவந்து காரில் ஏறி ராதிகா கோபிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.

நீ என்ன ராதிகா இங்க என கேட்க நீங்க உங்க அம்மா என்ன பேசறாங்கன்னு என்கிட்ட மறைச்சிடுவீங்க என்று சொல்லித்தான் வந்தேன் என சொல்கிறார். உடனே கோபி நான் உன்கிட்ட என்ன மறச்சிருக்கேன்? நம்ப ரோட்ல சண்டை போட்டது பத்தி அம்மா கேட்டாங்க வேற எதுவும் சொல்லல என சொல்ல ராதிகா உங்க அம்மா என்னை விட்டுட்டு வந்துடுன்னு சொன்னதை நான் கேட்டேன் என சொல்கிறார். ‌‌ அம்மா பேசினது எல்லாத்தையும் கேட்டுட்டா போலையே என கோபி தயங்கி எதையோ சொல்லி சமாளிக்க முயற்சி செய்ய ராதிகா அவங்க சொன்னது கூட எனக்கு பயமா இல்ல நீங்க எல்லாத்துக்கும் சம்பந்தம்னு சொல்ற மாதிரி அமைதியா இருந்தது தான் பயமா இருக்கு என சொல்கிறார்.

நான் அம்மாகிட்ட எதுவுமே சொல்லலையே அமைதியா தானே இருந்தேன் என கோபி சொல்ல நீங்க அப்படியே உங்களோட போக வேண்டியது தானே? யாரு உங்கள தடுத்திட்டு இருக்கா? நானா உங்கள குடிக்க சொன்னேன்? எதுக்கு அந்த பழியை தூக்கி என் மேல போடுறாங்க என ராதிகா சத்தம் போட நான் அந்த வீட்ல இருக்கு வரைக்கும் குடிச்சது கிடையாது அதனாலதான் அப்படி சொல்றாங்க என சொல்ல அப்போ இங்கே வந்து எதுக்கு குடிக்கிறீங்க என ராதிகா கேள்வி கேட்டு கோபியை ஆஃப் ஆக்குகிறார்.

அடுத்ததாக பாக்கியா வீட்டில் எல்லோரும் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஈஸ்வரி உங்க எல்லாருக்கும் எப்படி சிரிப்பு வருது என் பையன் அங்க கஷ்டப்பட்டுகிட்டு இருக்கான் என சொல்லி கோபப்படுகிறார். இதனால் எழில் அவர் பண்ண தப்புக்கு நாம என்ன பண்ண முடியும் என பேச ஈஸ்வரி அவனை பேசாத என திட்டுகிறார். என்னதான் இருந்தாலும் அவன் என்னுடைய புள்ள அவன் தப்பான வழியில போறத என்னால பாத்துகிட்டு இருக்க முடியாது என சொல்லி அவனை இந்த வீட்டுக்கு வர சொல்லி இருப்பதாக சொல்ல எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

அது எப்படி சரியாக வரும் என கேட்க, அவன் இங்க கண்டிப்பா வருவான் அதுக்கப்புறம் மத்தத பேசிக்கலாம் என சொல்லி ஈஸ்வரி எழுந்து செல்கிறார். பிறகு ராதிகா கேன்டீனில் பாக்யாவை கூப்பிட்டு வேலை வாங்கி பிறகு இன்னசென்ட் மாதிரி நடிச்சு கோபியை விட்டுக் கொடுக்கிற மாதிரி விட்டுக் கொடுத்து இப்போ அவர உங்க மாமியார் மகன வச்சு இழுக்க பார்க்கறீங்களா என கோபப்படுகிறார்.

மேலும் என்ன உங்களால கோபி இல்லாம இருக்க முடியல என கேட்க நான் வேண்டாமே தூக்கி போட்டதோடு தான் நீங்க இப்போ வாழ்ந்து கிட்டு இருக்கீங்க. நான் தூக்கிப்போட்ட பொருளை எப்பவும் திரும்ப தேடி வர மாட்டேன் என பாக்கியா பதிலடி கொடுக்கிறார்.

பிறகு வீட்டுக்கு வந்த ராதிகா கோபிக்கு காபி கொடுத்துவிட்டு நீங்க சரியான பிராடு அதனாலதான் பாக்கியா நீங்க கேட்டதும் டிவேர்ஸ் கொடுத்துட்டு இருக்காங்க. அவங்க தப்பிச்சுட்டாங்க நான் வந்து மாட்டிக்கிட்டேன் என சத்தம் போட்டுக் கொண்டிருக்க அப்போது காலிங் பெல் அடிக்க உங்க அம்மா உங்களை கூட்டிட்டு போக வந்துட்டாங்களா இன்னிக்கி அவங்களுக்கு இருக்கு என ராதிகா கதவை திறக்க ராதிகாவின் அம்மா அங்கே நிற்கிறார். இதைப் பார்த்து கோபி ஷாக் ஆகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.