கேட்டரிங் ஆர்டர் எடுக்க போன பாக்யாவுக்கு எதிர்பாராத ட்விஸ்ட் காத்துக் கொண்டிருந்தது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் எல்லோருக்கும் 15 நிமிடம் டைம் கொடுக்கப்படும் அதற்குள் நீங்கள் உங்கள் டேபிளில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி ஒரு டிஷ் செய்ய வேண்டும் என சொன்னதால் வந்திருந்தவர்களில் சிலர் இதை எங்களால் செய்ய முடியாது என கிளம்பிச் சென்றனர்.

கேட்டரிங் ஆர்டர் எடுக்க போன பாக்கியாவுக்கு காத்திருந்த ட்விஸ்ட்... போட்டியில் வெற்றியா? தோல்வியா? பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மீதம் 10 பேர் மட்டுமே இரண்டு நிலையில் ஐந்து நபர்களாக பிரித்து இரண்டு குழுவாக போட்டி நடைபெற்றது. அதன் பிறகு ராஜசேகர் இவை அனைத்தையும் டெஸ்ட் செய்து ஈஸ்வரி மசாலா கேட்டரிங் சர்வீஸை அழைக்க பாக்கியா உள்ளே செல்கிறார். ராஜசேகரை பார்த்ததும் அவருக்கு என்பது கேட்க நீங்க பாக்கியலட்சுமி தானே எப்படி இருக்கீங்க என ராஜசேகரும் நலம் விசாரிக்க அதன் பிறகு நீங்க செஞ்ச டிஷ் இந்த முறையும் சூப்பர் ஆனா எங்களால ரிஸ்க் எடுக்க முடியாது இது சாதாரணமாக ஆயிரம் பேருக்கு சமைக்கிற விஷயம் கிடையாது ஒரே நேரத்துல ஆறு மண்டபத்துக்கு சமைக்கணும். பெண்களால இதை செய்ய முடியுமா என்பது சவாலான விஷயம் தான் என சொல்கிறார்.

ஆனால் பாக்கியா இந்த உலகத்துல வாய்ப்புக்காக காத்திருந்து தோத்தவங்க நிறைய பேர் இருக்காங்க. நீங்க குடுக்குற இந்த வாய்ப்பு என்னுடைய வாழ்க்கையில மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும். என்னுடைய வாழ்க்கையில் மட்டுமில்லாமல் உன் கூட இருக்க பெண்களோட வாழ்க்கையில் இது மிகப்பெரிய திருப்புமுனையாய் இருக்கும் என கூறுகிறார். எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க கண்டிப்பா உங்க பேரை கெடுக்க மாட்டேன் என பாக்யா சொல்கிறார். பிறகு யோசித்த ராஜசேகர் அப்படின்னா ஒன்னும் பண்ணலாம் எனக்கு ஒரு மினி பார்ட்டி ஹால் பொண்ணு இருக்கு அங்க ஒரு 200, 300 பேர் வருவாங்க அதுக்கு முதலில் சமைச்சு காட்டுங்க. அதுக்கப்புறம் இந்த கேட்டரிங் பத்தி பார்க்கலாம் என சொல்கிறார். ஒரே ஒரு வாய்ப்பு தான் எனவும் அழுத்தம் திருத்தமாக சொல்லிவிடுகிறார்.

கேட்டரிங் ஆர்டர் எடுக்க போன பாக்கியாவுக்கு காத்திருந்த ட்விஸ்ட்... போட்டியில் வெற்றியா? தோல்வியா? பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இருந்தாலும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு பாக்யா சந்தோஷத்துடன் கிளம்பிச் செல்கிறார். பிறகு எழிலிடம் நடந்த விஷயங்களை சொல்ல அவன் பாக்யாவை பாராட்டி வாழ்த்துகிறான். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.