ஹோட்டலில் இருந்து பாக்யா வீட்டுக்கு கிளம்ப வீட்டில் கோபி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஹோட்டலில் எல்லாத்தையும் பாக்கியா ரசித்து சாப்பிட உனக்கு நான் வெஜ் இவ்வளவு பிடிக்குமா என எதுன்னு கேட்க எனக்கே இப்போதான் தெரியுது என பாக்கியா கூறுகிறார். நாள் முழுக்க வீட்டில் கிச்சனில் வேலை பார்க்கும் போது ஒரு காபி போட்டு கொடுக்க மாட்டாங்களா என ஆசையாக இருக்கும். அவ்வளவு வேலை செய்ற அவங்களுக்கு ஒரு காபி போட்டுக்க தெரியாதா? நம்மள யாராச்சும் அன்பா பாத்துக்க மாட்டாங்களா என்ற ஒரு இயக்கம் தான் பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் அது நிறைய ஆண்களுக்கு புரிவதில்லை என கூறுகிறார்.

வீட்டுக்கு வரும் பாக்கியா.. கோபி கொடுத்த அதிர்ச்சி, ராதிகா செய்த வேலை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் இனியா அழுது கொண்டிருக்க கோபி இனி உங்க அம்மா வரமாட்டா அவ நம்ம யாரும் வேண்டாம்னு விட்டுட்டு போயிட்டா. இனிமே உனக்கு அம்மா அப்பா எல்லாம் நான்தான் உனக்கு என்ன வேண்டும் நாளும் எங்கிட்ட கேளுடா நான் எப்பவும் உன் கூடத்தான் இருப்பேன் என கூறுகிறார். இந்தக் குடும்பத்துக்காக நான் எவ்வளவு உழைச்சிருக்கேன் இப்பயும் பொழைச்சுக்கிட்டு இருக்கேன் இனியும் உழைப்பின் அப்படி இருக்கும்போது நான் செஞ்ச ஒரே ஒரு தப்பை மட்டும் வச்சுக்கிட்டு அவன் இவ்வளவு தப்பு பண்ணிக்கிட்டு இருந்தா நான் எதுக்கு இறங்கி வரணும்? இனிமே அவளா மனசு மாதிரி இந்த வீட்டுக்கு வந்தா கூட அவளை நான் ஏத்துக்க போவது கிடையாது.

எனக்கு தெரியாம யாராவது பாக்கியவுடன் பேசவும் பழகவோ இல்ல சமாதானம் செய்யவும் முயற்சி செய்தால் நடக்கிறதே வேற என கூறுகிறார். ஹோட்டலில் சாப்பிட்டு முடித்து வெளியே வந்த பாக்கியம் வீட்டுக்கு போகலாம் என சொல்ல எழில் எதுக்கு என கேட்க நீ போ நான் சொல்றேன் என கூறுகிறார். இப்போ வீட்டுக்கு போனா அவரு ரொம்ப சீன் போடுவாரு என சொல்ல நான் பாத்துக்குறேன் என பாக்யா கூறுகிறார்.

வீட்டுக்கு வரும் பாக்கியா.. கோபி கொடுத்த அதிர்ச்சி, ராதிகா செய்த வேலை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த பக்கம் வீட்டில் ரூமில் ஜெனி மற்றும் செழியன் உட்கார்ந்து அடுத்து என்ன செய்வது என யோசித்து கொண்டு இருக்க அப்போது ராதிகா ஜெனிக்கு போன் செய்ய போனை எடுத்து பேசிய ராதிகா விவாகரத்து குறித்து கேட்டது எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம் ஆமா ஆன்ட்டி டிவோஸ் கொடுத்துட்டாங்க என கூறுகிறார். ஜெய் என் போனை புடுங்கி ராதிகாவை கெட்ட வார்த்தையில் திட்டாத குறையாக பேசி போனை வைத்து விடுகிறார்.

ராதிகாவின் அண்ணா இது குறித்து கேட்க நான் அக்கறையோடு தான் போன் பண்ணி ஆனா ஜெனி இப்படி பேசுற என சொல்ல நீ உனக்கு மட்டும் நல்லவளா இரு எல்லோருக்கும் நல்லவளா இருக்கணும்னு நினைக்காத நான் சொல்றது உனக்கு புரியும் என்று நினைக்கிறேன் என ராதிகாவின் அண்ணன் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.