பழனிச்சாமியுடன் பாக்கியாவுக்கு கல்யாணம் என நினைத்து கோபி அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் ரூமில் பாக்கியா, பழனிச்சாமி மற்றும் லோபிகா என மூவரும் உக்காந்து பேசிக் கொண்டிருக்கும்போது பழனிச்சாமி அம்மா தேங்காய்ப்பால் சாதம் கேட்டாங்க என்று சொல்ல இன்னைக்கு நான் செய்து கொண்டு வருகிறேன் என பாக்கியா கூறுகிறார்.

இங்கே வீட்டில் அமிர்தா பாத்திரம் கழுவிக் கொண்டிருக்க எழில் கபோர்ட் பின்னாடி ஒளிந்து கொண்டு டிஷ்யூ பேப்பரை சுருட்டி அமிர்தா மீது தூக்கி வீசி சேட்டை செய்ய பிறகு இருவரும் கிச்சனில் ரொமான்ஸ் செய்ய அந்த நேரம் பார்த்து ஜெனி உள்ளே வந்து நான் எதுவும் பார்க்கவில்லை பிராமிஸா நான் எதுவும் பார்க்கவில்லை என சொல்லி மீண்டும் ரூமுக்கு செல்ல அமிர்தா எழிலை அடித்து வெளியே அனுப்புகிறார்.

அதன்பிறகு பாக்கியா தேங்காய் பால் சாதம் செய்து எடுத்துக்கொண்டு பழனிச்சாமி வீட்டுக்குச் சென்று அவருடைய அம்மாவுக்கு கொடுக்க அவர் ருசித்து சாப்பிடுகிறார். அதன் பிறகு எனக்கு கொடுத்த ரெண்டு வாக்குல ஒன்னு நிறைவேத்திட்ட இன்னொன்னு எப்ப நிறைவேற்ற போற என கேட்க பாக்யா என்னதுமா என்று கேட்க பழனிச்சாமி கல்யாணம் பற்றி பேசுகிறார்.

பிறகு மாமா கிட்ட சொல்லி பேசிட்டு உங்களுக்கு சொல்றேன் என்று சொல்ல பழனிச்சாமி கல்யாணம் எல்லாம் வேண்டாம் என்று கூறுகிறார். பாக்கியா இந்த விஷயத்துல நான் அம்மா பக்கம் தான் பொண்ணு பார்க்கிறோம் உங்களுக்கு கல்யாணம் பண்றோம் என சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பி வருகிறார்.

இங்க வீட்டில் ராமமூர்த்தி சிதம்பரம் என்பவரிடம் பேச அவருடைய மகளுக்கு சென்னையில் வேலை கிடைத்திருப்பதாக விஷயம் தெரிய வருகிறது. பாக்கியா அந்த பொண்ணு தானே பழனிச்சாமி சாருக்கு பாக்கலாம்னு சொன்னீங்க அவங்க கிட்ட கேட்டு பாருங்க என்று சொல்ல ராமமூர்த்தியும் இது பற்றி சொல்ல அவர் கண்டிப்பாக பார்க்கலாம் என்று சொல்கிறார்.

அதன் பிறகு அவர்களை நாளைக்கு வீட்டுக்கு வர சொல்கிறார். பழனிச்சாமியையும் பெண் பார்க்க வீட்டுக்கு வர சொல்வதாக சொல்லி ஃபோனை வைக்கிறார் ராமமூர்த்தி. பிறகு பாக்கியா பழனிச்சாமிக்கு போன் செய்து விஷயத்தை சொல்ல அவர் கல்யாணமெல்லாம் வேண்டாம் என சொல்கிறார்.

பிறகு பாக்கியா போனை அம்மாவிடம் கொடுக்க சொல்ல பழனிச்சாமி அம்மாவிடம் விஷயத்தை சொல்ல அவர் கண்டிப்பா நாளைக்கு வரோம் என சொல்கிறார். பிறகு பாக்கியா கல்யாணம் பற்றி எடுத்து சொல்ல பழனிச்சாமியும் சில சமயங்களில் கல்யாணம் பண்ணிக்கலாமேனு தோணும் என்று பதில் பேசுகிறார்.

பாக்கியா வாழ்க்கையில சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள ஒரு துணை வேண்டும், அப்படி தோணும்போது நாம ஏன் சார் ஒரு கல்யாணம் பண்ணிக்க கூடாது என்று பேச இதை வெளியில் இருந்து கேட்ட கோபி அடி பாவி என அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.