அப்பா மற்றும் ராதிகாவால் அடுத்தடுத்து கோபிக்கு எதிர்பாராத அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது.

Baakiyalakshmi Episode Update 10.01.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. எழில் தன்னுடைய தாத்தாவிடம் மொட்டை மாடியில் தனக்கு சில விஷயம் தெரியும் என சொல்ல அவர் அதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார். ‌ நான் அவர்கிட்ட அன்னைக்கு சத்தம் போட்டு பேசினேன் அவர் என்கிட்ட இனிமே அப்படி நடந்துக்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணுனார் என கூறுகிறார். அவனும் அவன் சத்தியமும் என தாத்தா சொல்ல அப்பா இன்னும் மாறாமல் அப்படியேதான் இருக்கிறாரா என கேட்கிறார்.

அப்பா மற்றும் ராதிகாவால் அடுத்தடுத்து கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதெல்லாம் இல்ல நான் வெளிய தான் பார்த்தேன் நான் பாத்துக்கறேன் என கூறுகிறார். தங்கமான புள்ளைங்கள வச்சிக்கிட்டு உங்க அப்பனுக்கு இந்த வயசுல இப்படி புத்தி கெட்டு திரியுரான் கூறுகிறார். இதெல்லாம் பாட்டிக்கோ இல்ல அம்மாவுக்கு தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க.

அதன்பிறகு கோபி அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருக்க அந்த நேரத்தில் எழிலும் அவருடைய தாத்தாவும் வந்து அமர்கின்றனர். ஈஸ்வரி பொங்கலுக்கு பெயிண்ட் அடிக்கணும் என பேச்சை தொடங்க கோபியின் அப்பா இந்த பொங்கலுக்கு எல்லாரும் ஊருக்கு போகலாம் என கூறுகிறார். எழில், ஜெனி, பாக்கியா மற்றும் ஈஸ்வரி என அனைவரும் ஓகே என சொல்கின்றனர். செய்யும் வேலை இருக்கு என்ன சொல்ல ஜெனி ஆமா அப்படித்தான் சொல்லுவான் நாம போகலாம் என கூறுகிறார்.

கோபி எத்தனை நாள் என கேட்க நான்கு நாள் என சொல்ல என்னால வர முடியாது வேலை இருக்கு என கூறுகிறார். வேணும்னா நீங்க போங்க நான் ரெண்டு நாள் கழித்து வருகிறேன் என சொல்கிறார். அவருடைய அப்பா அப்படி என்ன வேலை எல்லாரும் ஒண்ணா கொண்டாடுவதும் இன்னும் எத்தனை வருஷத்துக்கு இப்படி நம்ம பொங்கல் கொண்டாடுவோம் என்று தெரியாது என சொல்கிறார். இவர் சொல்வதை கேட்டு வீட்டில் உள்ள அனைவரும் அதிர்ச்சியாக ஈஸ்வரி பாட்டி ஏன்பா இப்படியெல்லாம் பேச வைக்கிற என கூறுகிறார். பிறகு கோபியின் சரி என சொல்லிவிட்டு ராதிகா வீட்டிற்கு செல்கிறார்.

அங்கு ராதிகா வீட்டில் உங்களுக்கு என்ன பிளான் இங்கே இருப்பீர்கள் தானே எனக்கு ஆபீஸில் எல்லோரும் சேர்ந்து வெளியே செல்வதாக கூறி விடுகிறார். பொங்கல் முடிந்த பிறகு கண்டிப்பாக நாம ஒன்றாக சேர்ந்து வெளியே போகலாம் என மயூவிடம் பிராமிஸ் செய்கிறார். ராதிகாவின் அம்மா பேசாம ஊருக்கு போகலாம் என கூறுகிறார். உடனே கோபி இது நல்ல ஐடியா என சொல்கிறார். அதன்பிறகு எந்த ஊருக்கு என ராதிகா கேட்க நம்ம ஊருக்கு திருநெல்வேலிக்கு போகலாம் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். அவ்வளவு தூரம் எதுக்கு? நான் கூட கோயம்புத்தூர் போறீங்கன்னு நினைத்தேன். திருநெல்வேலி வரைக்கும் இப்படியே காலை வச்சுக்கிட்டு போக முடியாது. ரிஸ்க் எடுக்கவேண்டாம் என கூறி விடுகிறார். ராதிகாவும் சரி என சொல்ல கோபி நிம்மதி அடைகிறார்.

அப்பா மற்றும் ராதிகாவால் அடுத்தடுத்து கோபிக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி சீரியல் இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன்பிறகு ஈஸ்வரி பாக்கியா கிச்சனில் இருக்க அப்போது அங்கு வந்து உங்க மாமா எதுக்கு அப்படி சொன்னார் நீ வந்து கேளு அவருக்கு ஏதாவது பிரச்சனையா? நான் கேட்டா சத்தம் போடுவாரு நீ வந்து கேளு என பாக்யாவை அழைத்துச் செல்கிறார். மாமா எதுக்கு நீங்க அப்படி சொன்னீங்க, உடம்புக்கு ஏதாவது முடியலையா என கேட்க அதெல்லம் ஒன்னும் இல்ல என கூறுகிறார். உங்க உடம்புக்கு ஒண்ணும் இல்லனு அத்தை தலை மேல சத்தியம் பண்ணிச் சொல்லுங்க என கேட்க அவர் சத்தியம் செய்து அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை என கூறுகிறார். பிறகு பாக்கியா மேலயும் சத்தியம் பண்ணி சொல்லுங்க என கேட்க அவர் கடவுள் மேல சத்தியமா ஒரு பிரச்சினையும் இல்லை என கூறுகிறார். பிறகு எழில் அமிர்தாவின் வீட்டிற்கு செல்கிறார். அமிர்தாவின் அம்மாவும் அப்பாவும் அவரை உள்ளே அமர வைக்கின்றனர்.