நடுக்காட்டில் ஈஸ்வரி காணாமல் போக கோபி அதிர்ச்சியில் ஆக்சிடென்ட் செய்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் இனியா ப்ராஜெக்டுக்காக எல்லாரும் காட்டுக்குள் சென்றுள்ள நிலையில் ஈஸ்வரி எனக்கு கால் வலிக்குது என்று சொல்ல பாக்யா சரிங்க அத்தை அப்ப நீங்க இங்கேயே இருங்க செல்வி உங்களுக்கு தனியா இருக்கட்டும் நாங்க ரெண்டு பேரும் போயிட்டு வரோம் என்று சொல்லி கிளம்பிச் செல்கின்றனர்.

பிறகு ஈஸ்வரி எனக்கு தண்ணீர் தாகமா இருக்கு என்று சொல்ல செல்வி பாக்யாவுக்கு போன் போகாததால் தண்ணீர் வாங்கி வர ஊருக்குள் வர ஈஸ்வரி தனியாக இருக்க அப்போது யானை பிளிருவது போல சத்தம் கேட்டு பயந்து செல்வியை தேடி வருகிறார்.

வழித்தவறி செல்லும் ஈஸ்வரி காட்டுக்குள் பாக்யா, செல்வி என அலறி துடித்துக் கொண்டே தேடி அலைகிறார். செல்வியும் ஈஸ்வரியை காணாமல் தேடி அலைய பிறகு பாக்யாவும் இனியாவும் வர அவர்களும் ஈஸ்வரி காணாமல் போன விஷயம் அறிந்து அதிர்ச்சி அடைகின்றனர்.

பாக்யா கைடுடன் ஈஸ்வரி தேட போக இனியா கோபிக்கு போன் செய்து தகவல் கொடுக்க கோபி அதற்கு அழைக்கிறார். பிறகு பாக்கியா ஒரு வழியாக ஈஸ்வரியை தேடி பிடிக்க இங்கே பதற்றத்தில் கோபி ஆக்சிடென்ட் செய்து விடுகிறார். பிறகு கோபி தெரியாமல் செய்து விட்டதாக சொல்லி அவர்கள் மன்னிப்பு கேட்டு சிகிச்சைக்காக 3000 கொடுத்து பாக்கியவால் நிம்மதியே இருக்காது போல என்று புலம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.