
ராதிகாவிடம் கோபி சிக்க கடைசியில் ஈஸ்வரி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி இனியாவை விடுவதற்காக கேண்டீன் திறப்பு விழாவுக்கு வந்த நிலையில் அப்போது ராதிகா வந்து இறங்க கோபி அதிர்ச்சி அடைகிறார்.

யாரும் வரக்கூடாதுனு சொன்னா எல்லோரும் வந்திருக்காங்க என கோபப்பட கோபி ராதிகாவை சமாளித்துவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார்.
அடுத்து ராஜசேகர், கோடீஸ்வரன் என எல்லோரும் வர பாக்கியா அவர்களை வரவேற்று பொக்கே கொடுக்கிறார். இந்த நேரத்தில் ராதிகா வர பாக்கியா ராதிகாவையும் வரவேற்று உட்கார வைக்கிறார்.
அடுத்து இங்கே பாக்கியா ஈஸ்வரி வருவார் என நம்பிக்கையோடு காத்திருக்க வீட்டில் இருக்கும் ஈஸ்வரி பாக்கியா காலில் விழுந்து பேசியதை நினைத்து பார்த்து பங்ஷனுக்கு கிளம்புகிறாள்.
பங்ஷன் தொடங்கும் நேரத்தில் ஈஸ்வரி வர ராதிகா அவரை வரவேற்க நீ எதுக்கு என்னை வரவேற்கிற? நான் என் மருமகள் கேண்டீன் திறப்பு விழாவுக்கு வந்தேன் என்று சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.

அடுத்து பாக்கியா ஈஸ்வரியை வரவேற்று விளக்கேத்த வைக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.