விவாகரத்து வாங்கிய கையோடு ராதிகா வீட்டுக்கு சென்றுள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் விவாகரத்து கிடைத்த கையோடு வெளியே வந்த கோபி பாக்கியாவை எல்லாத்துக்கும் பாக்கியா காரணம் என்பது போல பேசுகிறார். எப்படா நானே விவாகரத்து கேட்பேன் என பிளான் பண்ணி எல்லாத்தையும் பண்ணி இருக்க என கூறுகிறார். கடைசியாக இனிமே அந்த வீட்டுக்குள்ள கால் எடுத்து வைக்க கூடாது என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

விவாகரத்து வாங்கிய கையோடு கோபி செய்த வேலை.‌. ராதிகா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு எழில் எதுக்குமா அமைதியா இருந்த என கேட்க ஒருத்தர் மீது கோபப்படக்கூடாது அவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு தெருவில் நிறைய பேர் நடப்பாங்க அப்படித்தான் அந்த கோபிநாத் என பாக்யா சொல்லிவிட்டு தன்னை வெளியே எங்கேயாவது அழைத்துச் செல்லுமாறு கூறுகிறார். பிறகு ஒரு நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போக சொல்கிறார்.

இந்த பக்கம் ராதிகா வீட்டில் எல்லோரும் இப்போதைக்கு ராதிகா மும்பைக்கு போவது தான் சரியான முடிவுக்கு வந்துவிட ராதிகாவும் தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். இது நேரத்தில் கோபி வீட்டிற்கு வந்து ராதிகாவிடம் விவாகரத்து கிடைத்த ரசீதை கொடுக்க இதைப் பார்த்த அவர் அதிர்ச்சடைகிறார். டீச்சர் எப்படி இதுக்கு ஒத்துக்கிட்டாங்க நீங்க தடுத்து நிறுத்திடுவீங்கன்னு நினைச்சேன் என ராதிகா சொல்ல நான் உட்பட வீட்டில் உள்ள எல்லோரும் முயற்சி செய்தும் ஆனால் எனக்கு முன்னாடி கோட்டை விவாகரத்து வேண்டும் என கோட்டுக்குப் போயிட்டதாக கோபி கூறுகிறார். அவளுக்கே அவ்வளவு திமிரு இருக்கும்போது எனக்கு அதுல கொஞ்சம் கூடவா இருக்காது. எனக்கு விவாகரத்து கிடைத்ததும் அப்படி ஒரு சந்தோஷம் அதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. உனக்காகத்தான் இது எல்லாத்தையும் செய்தேன். இனி முடிவெடுக்க வேண்டியது நீ தான் என கோபி சொல்லிவிட்டு இங்கிருந்து கிளம்புகிறார்.

விவாகரத்து வாங்கிய கையோடு கோபி செய்த வேலை.‌. ராதிகா எடுத்த முடிவு - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

வீட்டில் ராதிகா வீட்டிற்கு சென்று வந்த ஈஸ்வரியை எல்லோரும் நீ எதுக்கு இப்படி பண்ண என கேட்டுக் கொண்டிருக்க ஜெனி விவாகரத்து விஷயம் குறித்து பேச ஈஸ்வரி ரெண்டு பேரும் விவாகரத்து வேணும்னு தானே சொல்றத கேட்காமல் போய் இருக்காங்க இனி என்ன பண்றது என கூறுகிறார். உடனே இனியா அப்போ கண்டிப்பா அப்பா அம்மாவுக்கு விவாகரத்து கிடைச்சிருமா இந்த வீட்ல இருக்க போறது யாரு அம்மாவா அப்பாவா கேட்டு அழுகிறாள். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.