ஏத்திவிட்ட ஈஸ்வரியால் கோபி கேட்ட கேள்வியால் ராதிகா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராதிகா ஜெனி குறித்து நலம் விசாரிக்க ஈஸ்வரி அப்போ அவ கீழ விழும் போது நீ மட்டும் தான் இருந்தியா? அப்படின்னா நீ தான் அவளை தள்ளி விட்டயா என கேட்டு அதிர்ச்சி கொடுக்கிறார்.

ராதிகா இப்படி எல்லாம் பேசாதீங்க மனசு கஷ்டமா இருக்கு என்ன பாத்தா உங்களுக்கு எப்படி தெரியுது என கண்கலங்கியபடி ரூமுக்குள் வருகிறார். இங்கே பாக்யா ஏன் அத்தை இப்படி எல்லாம் பேசுறீங்க அவங்க ஏன் ஜெனியை தள்ளிவிட போறாங்க என பேச ராமமூர்த்தி பால் கிழே கொட்டிருச்சு, அப்போ நானும் இங்க தான் இருந்தேன் என சொல்கிறார்.

பிறகு ரூமுக்கு வந்த ராதிகா என்ன பத்தி இவங்க எல்லாம் என்னதான் நினைச்சுட்டு இருக்காங்க என்ன பிடிக்கலை என்பதற்காக என்ன வேணும்னாலும் பேசுவாங்களா இதை இப்படியே விடக்கூடாது என கோபிக்கு போன் போட்டு உடனடியாக வீட்டுக்கு வர சொல்கிறார்.

வீட்டுக்கு வரும் கோபி ஈஸ்வரி டென்ஷனாக இருப்பதை பார்த்து என்னாச்சு என கேட்க ராதிகா ஜெனி எப்படி தள்ளி விட்டதாக ஈஸ்வரி சொல்ல அதை அப்படியே நம்பும் கோபி ரூமுக்குள் வந்து ராதிகாவை பார்த்து கண்டபடி பேசி திட்டுகிறார். நீ என்னதான் நெனச்சிட்டு இருக்க அப்படி என்ன உனக்கு கோபம்? எதுக்கு நீ ஜெனியை புடிச்சு கீழே தள்ளின என கேட்க இதனால் ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு ராதிகா போதும் நிறுத்துங்க உங்க அம்மா தான் எதுவும் தெரியாம பேசுறாங்கனா நீங்களும் அவங்க சொல்றத அப்படியே நம்பிட்டு வந்து என்னை இப்படி கேட்கறீங்க? என்னை பார்த்தா உங்களுக்கு கொலைகாரி மாதிரி தெரியுதா சொல்லுயா சொல்லு என கோபியின் சட்டையை பிடித்து ஆவேசப்படுகிறார்.

பிறகு நடந்த விஷயங்களை சொல்ல கோபி மன்னிப்பு கேட்க யாருக்கு யார் வேணும் உங்க மன்னிப்பு என சத்தம் போடுகிறார். பிறகு வீட்டுக்கு வரும் ராதிகா தன்னுடைய அம்மாவிடம் நடந்த விஷயங்களை சொல்லி கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.