கேண்டின் திறப்பு விழாவுக்கு அனுப்பாமல் நிறுத்திய கோபிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் இனியா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி ராதிகாவிடம் ரொமான்ஸாக பேச அவர் இன்னைக்கு தான் கேண்டின் திறப்பு விழா என சொல்ல யாரையும் போக விட மாட்டேன் என சொல்லி கொண்டிருக்க இனியாவும் தாத்தாவும் ரெடியாகி வெளியே வர இனியா நீ போக கூடாது நாம் வெளியே போகலாம் என சொல்லி தடுத்து நிறுத்துகிறார். இனியாவை வெளியே அழைத்து செல்கிறார். இந்த நேரத்தில் ராதிகாவுக்கு அவரது பாஸ் போன் போட்டு கேண்டின் திறப்பு விழாவுக்கு வர சொல்கிறார்.

அடுத்து பாக்கியா வீட்டில் எல்லோரும் கிளம்பி வர ஈஸ்வரி நான் வர மாட்டேன் என கூறி அதிர்ச்சி கொடுக்கிறார். பாக்கியா அப்படியெல்லாம் சொல்லாதீங்க அத்தை என காலில் விழுந்து கொஞ்சுகிறார். ஆனாலும் ஈஸ்வரி நான் வர மாட்டேன் என உறுதியாக இருக்க ராமமூர்த்தி நீ வா மா என சொல்லி பாக்கியாவை அழைத்து கொண்டு கிளம்புகிறார்.

பிறகு கோபி இனியாவிடம் எங்க போகலாம் என கேட்க அவர் அம்மா கேண்டின் திறப்பு விழாவுக்கு போகலாம் என சொல்ல அங்க தவிர்த்து வேற எங்கேயாவது போகலாம் என சொல்ல இனியா ஏன் போகக் கூடாது என காரணம் கேட்க ராதிகாவுக்கு பிடிக்கல அதனால போக கூடாது என சொல்ல இனியா உங்களுக்கு அவங்க சந்தோஷம் தான் முக்கியம் என்னை பத்தியெல்லாம் உங்களுக்கு கவலையே இல்லை என கோபப்பட்டு காரில் இருந்து இறங்குகிறார்.

கோபி இனியாவை சமாதானம் செய்ய முயற்சி செய்ய இனியா அம்மா பங்ஷனுக்கு போகணும் என்னை கூட்டிட்டு போங்க, உங்களை பிடிக்கவே இல்லை, நீங்க நல்லவரு நினைச்சேன், ஆனால் அப்படி இல்லை என சொல்ல கோபி வேறு வழியில்லாமல் இனியாவை பங்ஷனுக்கு அனுப்ப ஓகே சொல்கிறார்.

அடுத்து எல்லாரும் விவரமா தான் இருக்காங்க, நீ தான் முட்டாளா இருக்கடா என புலம்புகிறார் கோபி. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.