கல்யாணத்தை நிறுத்தி பாக்கியா கேட்ட கேள்வியால் எழில் உண்மைகளை உடைத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா அமிர்தாவை கூட்டிக்கொண்டு வந்து எழில் இந்த பொண்ணைத்தான் விரும்பினான் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். ஈஸ்வரி உனக்கு என்ன பைத்தியமா எழில் விருப்பப்பட்டு தானே இது எல்லாமே நடக்குது என சொல்கிறார்.

அதுமட்டுமல்லாமல் ஈஸ்வரி நான் அன்னைக்கே உங்க வீட்டுக்கு வந்து என்ன சொன்னேன் இதெல்லாம் செட்டாகாது எங்க பையனுக்கு உங்க பொண்ணு கல்யாணம் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டு தானே வந்தேன் இப்ப என்ன எல்லாரும் சேர்ந்து நாடகம் போடுறீங்களா என பேச பாக்கியா அவங்கள எதுவும் சொல்லாதீங்க நான் தான் உங்களை கிளம்பி வர சொன்னேன் என கூறுகிறார்.

இதுக்கு மேலயும் பேச என்ன இருக்கு வா வர்ஷினி போகலாம் இன்னும் அவமானப்பட முடியாது என வர்ஷிணியின் அப்பா சொல்ல ஈஸ்வரி கொஞ்சம் பெரிய மனசு பண்ணுங்க கண்டிப்பா இந்த கல்யாணம் நடக்கும் எழில் வர்ஷினி கவிதையில் தான் தாலி கட்டுவான் என சொல்கிறார். பாக்கியா நீங்க ஒரு நாளுக்காக பாக்கறீங்க ஆனா இந்த கல்யாணம் நடந்தா ரெண்டு பேருமே வாழ்நாள் முழுக்க சந்தோஷமா இருக்க முடியாது.

ஒரு பொண்ணை மனசுல நினைச்சுட்டு என் பையனால உங்க பொண்ணோட எப்படி சந்தோஷமாக வாழ முடியும் என கேட்கிறார். மேலும் பாக்கியா இல்லை கூட்டி வந்து சொல்லு இப்பயாவது உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லு என நிற்க வைக்க எழில் பேசாமல் அமைதியாக இருக்கிறார். ஈஸ்வரி சொல்லுடா, எனக்கு வர்ஷினி கல்யாணம் பண்ணிக்க சம்மதம்னு சொல்லு என பேச அப்பவும் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

பணத்துக்காக ஒரு பொண்ணு நீ கல்யாணம் பண்ணிக்குவியா? நம்பிக்கை துரோகத்தினால் நம்ம வீட்ல என்ன பிரச்சனை எல்லாம் நடந்தது என்று உனக்கு தெரியாதா? ஒரு பொண்ணுக்கு நம்பிக்கை கொடுத்திட்டு இப்படி நெருக்கதியா நிற்க வைத்துவிட்டு இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவியா?

நான் தானே உன்னை வளர்த்தேன்? உன்னால எப்படி இப்படி ஒரு முடிவு எடுக்க முடிந்தது என பாக்யா கேட்க, எழில் அமிர்தாவின் பக்கம் போய் நின்று நான் அமிர்தாவை தான் காதலிக்கிறேன். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தான் இந்த முடிவை எடுத்தேன், நான் எடுக்கிற முடிவு சரியா தவறான்னு யோசிக்காமல் தான் எடுத்தேன். நான் அமிர்தாவை கல்யாணம் பண்ணிக்குவேன்னு வாக்கு கொடுத்து இருந்தேன் என சொல்ல ஈஸ்வரி உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள்.

பிறகு வர்ஷினியின் அப்பா வர்ஷினியை கூட்டிக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். பாக்கியா கல்யாணத்துக்கு ஆன செலவை நாங்கள் திருப்பிக் கொடுத்து விடுகிறோம் என வாக்கு கொடுக்கிறார். கோபி எல்லாரும் பிடித்தவர்களை கல்யாணம் பண்ணிக்கிட்டு தான் சந்தோஷமா வாழறாங்களா? கிடைச்ச வாழ்க்கையை சந்தோஷமாக வாழவில்லையா?

இப்போ உன்னால இந்த கல்யாணம் நின்னு போச்சு அவனுடைய கெரியரும் நாசமா போச்சு இப்போ என்ன பண்ண போற என கேள்வி எழுப்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.