படாதபாடு படுத்திய ராதிகாவால் பயத்தில் கோபி நடுங்கிப் போய் உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஏய் பாக்கியா ரேஷன் கார்டு எடுத்துட்டு வா என அதிகாரமாக சொல்ல ஏய் வா போனு பேச நான் ஒன்னும் உங்க பொண்டாட்டி கிடையாது மரியாதை முக்கியம் என பாக்கியா பதிலடி கொடுக்க எல்லோரும் சூப்பர்மா என கூறுகின்றனர்.

படாத பாடு படுத்திய ராதிகா.. பயத்தில் நடுங்கி கோபி செய்த வேலை, எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

அடுத்து ரேஷன் கார்டு எல்லாம் கொடுக்க முடியாது என கோபியை துரத்தி அடிக்க கோபி வீட்டுக்கு போய் என்ன நடக்குதுன்னு தெரியல எனக்கு ஒன்னும் புரியல என சத்தம் போட ராதிகா உங்களால எதுவுமே பண்ண முடியாதா? அந்த வீட்ல இருந்து தானே வெளியே வந்தீங்க எல்லாரும் சேர்ந்து தான் உங்களை வெளியே அனுப்புனாங்க அப்படி இருக்கும்போது ஒரு ரேஷன் கார்டு கூட உங்களால வாங்க முடியல என சத்தம் போடுகிறார்.

என்ன நீ கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி மாறிட்ட என கோபி கேட்க உங்களுக்காக நமக்காகத்தான் நான் கஷ்டப்பட்டு கல்யாணம் பண்ணேன். ஆனால் உங்களால் ஒரு ரேஷன் கார்டு வாங்கிட்டு வர முடியல என சத்தம் போட கோபி உனக்கென்ன ரேஷன் கார்டு தானே வேணும் நான் ரேஷன் கார்டோட வரேன் என சொல்லி மீண்டும் அங்கிருந்து கிளம்புகிறார்.

நேராக வீட்டுக்குள் வரும் கோபி கிச்சனில் சென்று ரேஷன் கார்டை தேடுகிறார். கோபியை அவருடைய அப்பா உட்பட எல்லோரும் வெளியே போக சொல்ல கோபி ரேஷன் கார்டு இல்லாமல் நான் போக மாட்டேன் என தேட அப்போது செழியன் ஜெனி அந்த ரேஷன் கார்டு எங்க இருக்கு என கேட்க கபோர்டுல பர்ஸ்ல இருக்கும் என சொல்ல அதைத் தேடி எடுக்கிறார் கோபி. மேலும் நான் வீட்டை விட்டு வெளியே போனதும் எல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கீங்க, தினமும் பிரியாணி தான் போல, ஊருக்கே வாசனை வருது என கூறுகிறார். ரொம்ப சந்தோஷமா இருங்க என சொல்லிவிட்டு ரேஷன் கார்டு எடுத்துக்கொண்டு என் பெயரை நீக்கிட்டு ரிட்டர்ன் பண்றேன் என கிளம்புகிறார்.

படாத பாடு படுத்திய ராதிகா.. பயத்தில் நடுங்கி கோபி செய்த வேலை, எழிலுக்கு காத்திருந்த அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

ரேஷன் கார்டு எடுத்துட்டு போய் ராதிகாவிடம் நீட்டி இந்தா இப்போ உனக்கு சந்தோஷமா என கேட்க உடனே கூலாகும் ராதிகா எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க என்ன நடந்திருச்சு இப்போ? என அப்படியே மாறிவிடுகிறார். நீ கோபப்படாத கோவப்பட்டால் எனக்கு பயமா இருக்கு என கோபி பரிதாபமாக பேச சரி நான் போய் பிளாக் காபி போட்டுட்டு வரேன் என ராதிகா சென்று விடுகிறார்.

அடுத்து எழில் வீட்டுக்கு வர அப்போது ஈஸ்வரி வர்ஷினி வந்துட்டு போன விஷயம் பற்றி பேச அந்த பொண்ணு பார்க்க ரொம்ப அழகா பண திமிரு இல்லாம இருக்கா, நம்ப எழிலுக்கு கல்யாணம் பண்ணி வச்சா எப்படி இருக்கும்னு தோணுச்சு என சொல்ல எழில் அதிர்ச்சி அடைகிறான். பாக்கியா இப்ப எதுக்கு கல்யாணம் ரெண்டு மூணு வருஷம் போகட்டும் என சொல்ல, ஈஸ்வரி எழிலுக்கு நல்லா பெருசா கல்யாணம் பண்ணனும் லவ்வுனு ஏதாவது வந்த அவ்வளவு தான் என மிரட்டி விட்டு உள்ளே சென்று விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.