
ராதிகாவுடன் வந்த கோபிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி ராதிகாவின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்திய நிலையில் ராதிகா நடு ரோட்டில் நிற்பதை எல்லோரும் வேடிக்கை பார்க்கின்றனர்.
அதன் பிறகு ராதிகா அழுது கொண்டே கோபிக்கு போன் செய்து உடனடியாக வீட்டுக்கு வரச் சொல்லிப் போனை கட் செய்து விடுகிறார். மறுபக்கம் வீட்டில் உள்ளவர்கள் நீங்க பண்ணது ரொம்ப தப்பு என்று ஈஸ்வரிக்கு எடுத்து சொல்ல அதை எல்லாம் கேட்காத ஈஸ்வரி, இனிமேல் என்னால பொறுமையா இருக்க முடியாது எனக்கு இன்னைக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும் யாரும் எதுவும் பேசக்கூடாது என ஆவேசப்படுகிறார்.

ராதிகாவின் அம்மா கடைக்கு போயிட்டு வரும்போது ராதிகா வெளியே நின்று கொண்டிருப்பதை பார்த்து என்னாச்சு என கேட்க எல்லாத்துக்கும் நீ தான் காரணம் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிட்டாங்க என கண்கலங்கி அழ சரி வா வீட்டுக்கு போகலாம் என்று கூப்பிட ஒரு முடிவு தெரியாம நான் இங்கிருந்து நகர மாட்டேன் என ராதிகா சொல்லிவிடுகிறார். இதுக்கு என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும் என சொல்லி ராதிகாவின் அம்மா அங்கிருந்து நகர்கிறார்.
கொஞ்ச நேரத்தில் கோபி வர ராதிகா என்னை கழுத்த புடிச்சு வீட்ல இருக்க எல்லாரும் வெளியே தள்ளிட்டாங்க என்று அழ யார் உன்னை இப்படி வெளியே அனுப்பியது என்று கேட்க வேற யாரு? உங்க அம்மா தான் என்று சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பிறகு சரி வா என்ன என்று கேட்கிறேன் என கோபி ராதிகாவை அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல நில்லுடா என ஈஸ்வரி தடுத்து நிறுத்துகிறார். இனி இந்த வீட்ல ஒன்னு இவ இருக்கணும் இல்ல நான் இருக்கணும் என்று சொல்ல கோபி என்னமா பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க என்று கேட்க இவ என்னெல்லாம் பேசுற உங்க அப்பாவ மரியாதை இல்லாம பேசுற என்கிட்ட கைய நீட்டி நீட்டி பேசலாம் வீட்டை விட்டு வெளியே போக சொல்றா என்று சொல்ல கோபி செய்வது அறியாது தவிக்கிறார். பிறகு நாம் இங்கே வந்ததிலிருந்து பிரச்சனைதான் வா நம்ப வீட்டுக்கு போய்டலாம் என்று சொல்ல ராதிகா நீங்க எல்லாம் ஒரு மனுஷனா என கோபியை கண்டபடி பேச ஈஸ்வரி இதுதான் நீ புருஷனுக்கு கொடுக்கிற மரியாதையா? இதுக்குத்தான் இவ்வளவு ஆசைப்பட்டு கல்யாணம் பண்ணியா என ராதிகாவையும் கோபியையும் ஈஸ்வரி கேள்வி கேட்கிறார்.

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது ராதிகாவின் அம்மா போலீஸ் உடன் வர எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். ராதிகாவின் அம்மா இவங்க எல்லாரும் சேர்ந்து என் பொண்ணு கழுத்தை புடிச்சு வெளியே தள்ளிட்டாங்க.. வரதட்சனை கொடுமை, மாமியார் கொடுமை, முதல் மனைவி கொடுமை என எல்லாத்தையும் பண்றாங்க, இவங்க எல்லாரையும் புடிச்சு ஜெயில்ல போடுங்க என ஆவேசப்படுகிறார்.
போலீஸ் இருக்கும்போதே ஈஸ்வரி மற்றும் ராதிகாவின் அம்மாவுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட போலீஸ் அவர்களை தடுத்து நிறுத்தி உங்க மருமகளை எதுக்கு வீட்டை விட்டு வெளியே அனுப்பனீங்க என்று கேட்க யாருக்கு யார் மருமகள்? தெருவுல போற யாரோ வந்து வீட்ல உட்கார்ந்துட்டா மருமகளா ஆகிடுவாளா? எங்களுக்கு எப்பவும் பாக்கியா மட்டும் தான் மருமகள் என்று பேசுகிறார்.
இதனால் போலீஸ் கோபியிடம் நீங்களே சொல்லுங்க, உங்க மனைவி யாரு என்று கேட்க கோபி என்ன செல்வது என்று தெரியாமல் நிற்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.