பாக்கியாவுடன் வீட்டுக்கு வந்து கோபிக்கு ராதிகா பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்கியா கோபியை அழைத்துக் கொண்டு காரில் வீட்டுக்கு வரும்போது அவர் பாக்கியவை பற்றி பாராட்டியும் ராதிகாவை திட்டியபடியும் வருகிறார்.

என்ன எங்க வேணாலும் கூட்டிட்டு போங்க ஆனா ராதிகா வீட்டுக்கு மட்டும் கூட்டிட்டு போகாதீங்க என சொல்கிறார், குறிப்பாக இந்த காசி ராமேஸ்வரம் இங்க எல்லாம் நீங்க போக மாட்டீங்களா என கேட்க பாக்கியா பதில் ஏதும் சொல்லாமல் அமைதியாகவே வருகிறார்.

அடுத்து கோபி வாந்தி எடுப்பது போல செய்ய காரை நிறுத்தும் பாக்கியா எழிலிடம் விஷயத்தை சொல்ல அவர் வந்து பார்க்க கோபி என்ன ரெண்டு டிரைவரா இப்போ ரெண்டு பக்கம் ஸ்டேரிங் வச்சு கார் வந்திருச்சா சூப்பர் சூப்பர் என உளறுகிறார்.

பிறகு மீண்டும் கால் எடுத்து ஒரு வழியாக வீட்டுக்கு வர காரை விட்டு வெளியே இறங்கிய கோபி கீழே விழ கைத்தாங்களாக பிடித்துக் கொண்டு உள்ளே செல்கின்றனர். ராதிகா கோபிக்கு போன் போட கோபி எடுக்காமல் இருக்க கோபத்தோடு இருக்கிறார்.

இந்த நேரத்தில் காலிங் பெல் அடிக்க கதவை திறக்க கோபி குடிபோதையில் கோபி எழில் மற்றும் பாக்யாவுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பிறகு இருவரும் கூட்டி வந்து ஷோபாவில் படுக்க வைக்க ராதிகா நீங்க எங்க இருந்து இவரை கூட்டிட்டு வரீங்க என கேள்வி கேட்க ரோட்டில் விழுந்து கிடக்கிறதா போன் வந்தது மனசு கேட்கல அதான் கூட்டிட்டு வந்தோம் என சொல்கின்றனர்.

இவருக்கு நீங்க யார் என கேட்க அவருக்கு நான் யாரும் கிடையாது தான் ஆனால் கொஞ்ச நாள் உங்களுக்கு பிரண்டா இருந்திருக்கேன் பிரண்டோட ஹஸ்பண்ட் இப்படி கிடக்கும் போது விட்டுட்டு வர முடியல என சொல்கிறார். மேலும் ரொம்ப குடிச்சி இருக்காரு பார்த்துக்கோங்க என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

சோபாவில் படுத்துக் கொண்டிருக்கும் கோபி பாக்யா தான் பெஸ்ட் ராதிகா வேஸ்ட் என்று சொல்ல இதைக் கேட்டு ராதிகா கோபப்படுகிறார். பிறகு பாக்யாவுக்கு எதுக்கு போன் பண்ணனும் என போனை எடுத்து பார்க்க அதில் வைஃப் என பாக்கியா நம்பர் சேவ் செய்யப்பட்டு இருப்பது தெரிய வருகிறது.

கோபியிடம் சண்டை போட குடிபோதையில் எதுவும் புரியாமல் இருக்கிறார். ராதிகாவை கல்யாணம் பண்ணது தப்பு அவளை கல்யாணம் பண்ணதும் என் நிம்மதியே போச்சு என புலம்ப ராதிகா உன்ன கல்யாணம் பண்ணதனாலதான் என் வாழ்க்கையே நாசமா போச்சு என கோபப்பட்டு நான் கிளம்புறேன் என ரூமுக்கு செல்கிறார்.

அடுத்து வீட்டுக்கு வந்த பாக்கியா கோபியின் இந்த நிலைமையில் கண்டு வருத்தத்தோடு இருக்க எழில் அவர் மேல கொஞ்சம் நெஞ்சம் பாசம் இருந்தால் கூட அதை அப்படியே அழிச்சிடு அதுக்கு அவரு தகுதியானவர் கிடையாது என சொல்ல அதனால பாசம் இருக்கான்னு என்னால சொல்ல முடியாது ஆனா அவர் உங்க எல்லாருக்கும் அப்பா அவரு இந்த நிலைமையில பார்க்க கஷ்டமா இருக்கு என சொல்கிறார்.பிறகு எழிலிடம் உனக்கு வருத்தமா இல்லையா என கேட்க வருத்தமா இல்லைன்னு பொய் சொல்ல முடியாது என கூறி கண் கலங்குகிறார் ‌‌ இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.