எழில் மற்றும் அமிர்தா காதலுக்கு பச்சை கொடி காட்டுவார் என எழில் நம்புகிறார்.

Baakiyalakshmi Episode Update 06.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா இந்தியாவிடம் இரவில் தன்னுடைய பிசினஸ் மற்றும் அதன் வளர்ச்சி குறித்து பேசிக் கொண்டிருக்கிறார். நான் இந்த அளவுக்கு வளரும் என கொஞ்சம் கூட எதிர்பார்க்கல்ல. நீ இதை விட பெருசா வளரணும். இந்த உலகமே உன்னை பாராட்டனும். அந்த அளவுக்கு நீ பெருசா பிசினஸ் பண்ணனும் என கூறுகிறார். அது கலா ரொம்ப கஷ்டப்படும் நீ மட்டும் தான் ஆகனுமா என இனியா கேட்க அப்படி நடந்தா ரொம்ப நல்லா இருக்கும் என கூறுகிறார். பிறகு நான் திருநெல்வேலி பக்கத்துல ஒரு சின்ன கிராமத்தில் தான் படிச்சேன். அதனாலேயே இந்த அளவுக்கு ஒரு வேலையை செய்ய முடியுதுன்னா நீ சிட்டியில பெரிய ஸ்கூல்ல படிக்கிற என்னால கண்டிப்பா முடியும் என கூறுகிறார்.

ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh 

எழில் அமிர்தா காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் பாக்கியா?? சந்தோஷத்தில் எழில் - பாக்கியலட்சுமி இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்

அதன்பிறகு மகள் இனியாவை கொஞ்சிவிட்டு தூங்குகிறார். மறுநாள் காலையில் பாக்கியா செல்வியுடன் சேர்த்து மசாலாவை பாக்கெட்டுக்குள் போட்டுக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அவருடைய மாமனார் நான் ஏதாவது உதவி செய்யட்டுமா என கேட்க பாக்கியா வேண்டாம் என்று கூறிவிடுகிறார். செல்வி மசாலா அரைக்க இன்னும் இரண்டு பேரை சேர்த்துக் கொள்ளலாம் என கூறுகிறார். அவங்களுக்கும் சம்பளம் கொடுத்து வாடகை கொடுத்து நமக்கு எதுவுமே கையில நிற்காது என பாக்கியா சொல்கிறார். ரெண்டு பேரும் வேலைக்கு வெச்சுக்கிட்டா மசாலா அரைக்கிறது அதிகமாக்கும். அப்போ நமக்கு லாபமும் அதிகம் இருக்கும் அத வச்சு சமாளிச்சுக்கலாம் என செல்வி கூறுகிறார்.

இதைக் கேட்ட பாக்யாவின் மாமனாரும் இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு என சொல்கிறார். அந்த நேரத்தில் கரெக்டாக அக்கம்பக்கத்தில் இருந்து இரண்டு பேர் வந்து பாக்கியாவிடம் வேலைக்கு கேட்கின்றனர். பாக்யா என்ன செய்யலாம் மாமா என அவருடைய மாமனாரிடம் கேட்க அவர் மசாலா அரைக்க ரெண்டு பேர் வேணும்ல அதற்கு வச்சுக்கலாம் என கூறுகிறார். சரி எனக் கூறிவிட்டு அவர்களிடம் ஒன்றாம் தேதியிலிருந்து வேலைக்கு வாங்க. ஆனா சம்பளம் அதிகமாக இருக்காது என கூறுகிறார். அவர்களும் சரி என கூறிவிட்டு கிளம்புகின்றனர். நம்ப பேசிட்டு இருக்கும் போதே ஆள் கிடைத்து விட்டார்கள் என செல்வி சொல்ல நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதாவே நடக்கும் என பாக்யாவின் மாமனார் கூறுகிறார்.

ஏழு படம் நடிச்சு முடிச்சுட்டேன் – எல்லாரையும் கலாய்த்து தள்ளிய Pugazh

எழில் அமிர்தா காதலுக்கு பச்சைக்கொடி காட்டும் பாக்கியா?? சந்தோஷத்தில் எழில் - பாக்கியலட்சுமி இன்றைய சீரியல் எபிசோட் அப்டேட்

அடுத்ததாக எழில் சோகமாக வந்து அமர செல்வி குட் மார்னிங் சொல்லியும் அவர் அதை கவனிக்கவில்லை. பாக்யா காபி எடுத்து வந்து கொடுக்கிறார். ஈஸ்வரி பாட்டி எழிலிடம் என்னாச்சு சரியா தூங்கலையா எனக்கேட்க பாக்கியா ஷூட்டிங்ல வெயில்ல நிற்கிறான்ல அதுதான் அப்படி இருக்கும் என கூற எழிலும் அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி என கூற சரியென அவர் உள்ளே எழுந்து சென்று விடுகிறார்.

அதன் பிறகு செல்வியும் கடைக்குச் சென்றுவிட்டு வருவதாக கிளம்ப பாக்கியா எழிலிடம் என்ன பிரச்சனை நீ ஷூட்டிங் காரணமா இப்படி இல்லை எனக்கு தெரியும். எதுவாக இருந்தாலும் அம்மாகிட்ட சொல்லு என கேட்கிறார். உடனே எழில் கணவரை இழந்து தனியாக வாழ்ந்து வரும் தன்னுடைய கவிதா அத்தை பற்றி பேசுகிறார். பாக்கியா பாவம்டா அவ. தனியா இடம் பார்த்ததும் இங்கேயே வேலைக்கு வர சொல்லி விட்டேன். அவங்களுக்கு ஏன் மா இன்னொரு கல்யாணம் பண்ணி வைக்கல என கேட்கிறார். அப்போ நானும் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ என சொன்னேன். ஆனா வார்த்தையை மட்டும் தான் சொன்னேன் அவளே போய்யா மாப்பிள்ளை பார்த்து கட்டிப்பா? அதோடு அதற்கான முயற்சி நாங்களும் எடுக்கல அவங்க வீட்டிலேயும் எடுக்கல என கூறுகிறார்.

அவங்க ரொம்ப இளமையா இருக்காங்க, இப்போ அவங்களே கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒருத்தர் வந்தா நீ என்னமா பண்ணுவே என கேட்கிறார். கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்க சொல்லுவேன். ஒரு பொண்ணால இப்படியெல்லாம் தனியாவே இருந்திட முடியாது. அவளோட குழந்தையை கூட நான் இங்க கூட்டிட்டு வந்திடுவேன் என கூறுகிறார். உடனே எழில் சூப்பர்மா என சொல்ல பாக்கியா எதுவாக இருந்தாலும் என்கிட்ட சொல்லு என சொல்லிவிட்டு எழுந்து செல்கிறார்.

அமிர்தா காதல் விஷயத்தில் நீ எனக்கு சப்போர்ட்டா இருப்பனு நான் புரிஞ்சுகிட்டேன். அந்த நம்பிக்கை எனக்கு இருக்குமா என மனதிற்குள் சொல்லிக் கொள்கிறார் எழில். அதன் பிறகு எழில் அம்மா பாக்கியாவை வைத்து அவர் சொன்னபடி மசாலாவுக்கு என விளம்பரம் மற்றும் கேட்டரிங் ஆடர்களுக்கு என விளம்பரத்திற்கான சூட்டிங் செய்கிறார். முதலில் கொஞ்சம் தட்டி தடுமாறி பாக்கியா பிறகு எழில் சொல்வதைக் கேட்டு சிறப்பாக நடித்துக் கொடுக்கிறார்.

இதெல்லாம் முடிந்து மறுநாள் பாக்கியா ஜெனி துணி மடித்து கொண்டிருக்க அந்த நேரத்தில் இனியா தனக்கு ஒரு தமிழ் கட்டுரை வேண்டும் என கேட்டு வருகிறார். இந்த காலத்து பெண்கள் அந்த காலத்து பெண்கள் ஏற்பட்ட பிரச்சினைகள் குறித்து எழுத வேண்டும் என சொல்கிறார். ஜெனி இடம் உதவி கேட்க அவர் எனக்கு தமிழில் அவ்வளவு எழுத தெரியாது என கூறி விடுகிறார். பிறகு பாக்கியா நான் சொல்லவா என கேட்கிறார். என்னோட கதை அத்தையோட கதை ஜெனி சந்திக்கிற பிரச்சனை செல்வி சந்திக்கிற பிரச்சனை இதையெல்லாம் எழுதினா ஒரு கட்டுரை என கூறி விடுகிறார். உனக்கு வீட்டை விட்டால் யோசிக்க வேற எதுவும் தெரியாதா என இனியா கேட்க வீட்டை விட்டு விட்டு ஒரு பெண்ணால எப்படி யோசிக்க முடியும் என பாக்கியா கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.