Baakiyalakshmi Episode Update 06.07.23
Baakiyalakshmi Episode Update 06.07.23

மலேசியா ரெசிபி நான் வச்ச ஆப்பு என அதிர்ச்சி கொடுத்துள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் வீட்டுக்கு கிளம்பியதும் உள்ளே வரும் சுதாகரின் மனைவி மற்றும் சம்மந்தி மலேசியாவில் இருந்து 20 பேர் வரைந்த அவர்களுக்கு மலேசியா ஃபுட் சமைக்கணும் என சொல்ல பாக்யா அதிர்ச்சி அடைகிறார்.

சமைத்துவங்கள் தானே முடியுமா என்று கேட்க பாக்யா முடியும் பண்ணிக்கொள்ளலாம் ஒன்னும் பிரச்சனை இல்லை என சொல்லி பிறகு என்ன செய்வது எப்படி சமைப்பது எனக்கு தெரியாமல் தவிக்கிறார். மேலும் பழனிச்சாமி இடம் சென்று எப்படி சமைப்பது என தெரியாமல் முடித்த அவர் பிரச்சனையே பெரிசா பாக்காதீங்க எலி மாதிரி சின்னதா பாருங்க உங்களால் முடியும் என மோட்டிவேட் செய்ய பிறகு பாக்கியா நான் பார்த்துக்கிறேன் என சொல்லி வந்து இரவெல்லாம் முயற்சி செய்கிறார்.

மறுநாள் காலையில் கோபி பாக்யாவை தடுத்து நிறுத்தி மலேசியன் ஃபுட் ரெசிபி லிஸ்டு எல்லாம் வந்துடுச்சா? அது உனக்கு நான் வச்ச ஆப்பு, நீ அசிங்கப்பட்டு நிற்கப்போற என்று நக்கலாக பேசிவிட்டு செல்ல பாக்யா அதிர்ச்சியுடன் சென்று விடுகிறார்.

அதன் பிறகு எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருக்க மலேசியா காரர்கள் தட்டு மட்டும் எதுவும் இல்லாமல் இருப்பது பார்த்து திருமண வீட்டார் என்ன சாப்பாடு வருமா வராதா என்று கேட்டுக் கொண்டிருக்க கோபி பாக்கியா அசிங்கப்பட போவதை ஆவலோடு பார்க்க காத்துக் கொண்டிருக்கிறார்.

அந்த சமயம் பார்த்து பாக்கியா மலேசியன் ரெசிபிகளை எடுத்து வந்து வைத்து பரிமாறி அசத்த பிறகு பாக்கியாவை மேடைக்கு அழைத்து பாராட்டி சார்பு அணிவித்து கௌரவப்படுத்த கோபி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.