பாக்யாவிடம் பேசி ராதிகாவிடம் வசமாக சிக்கி உள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியாவிடம் பேசிவிட்டு கோபி உள்ளே செல்ல ராதிகாவின் அண்ணி நல்லா சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கீங்க என சொல்லி நீங்கள் இப்படி பண்ணுவீங்கனு நினைக்கல என வெளியே சென்று விடுகிறார்.

வசமாக சிக்கிய கோபி.. ராதிகா சொன்ன வார்த்தைக்கு பாக்யா கொடுத்த தரமான பதிலடி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

கொஞ்சம் கூட புடிக்கல நீங்க எதுக்கு டீச்சர் கூட பேசினீங்க என ராதிகா கேட்க அவகிட்ட நான் சிரிச்சு சிரிச்சு பேசல கோவமா தான் பேசிகிட்டு இருந்தேன். உன் கண்ணு முன்னாடி எங்க ரெண்டு பேரோட கல்யாணம் நல்லபடியா நடக்கும்னு சொன்னேன் சத்தியமா என்னை நம்பு பாக்கியா என கூறிவிடுகிறார். என்னது பாக்கியவா நீங்களும் என்ன இரிடேட் பண்றீங்க என ராதிகா சத்தம் போட அவகிட்ட கோவமா பேசிட்டு வந்ததில்ல அப்படியே உளறிட்டேன் என கோபி கூறுகிறார்.

பிறகு பாக்கியா சமையல் வேலைகளை கவனிக்க வீட்டில் தூக்கம் வராமல் கோபியின் அப்பா தவித்துக் கொண்டிருக்க ஈஸ்வரி எல்லாம் நல்லபடியா நடக்கும் தப்பா எதுவும் நடக்காது என விஷயம் தெரியாமல் சமாதானம் செய்கிறார். காலையில எப்படியாவது இந்த கல்யாணத்தை நிறுத்தணும் என கோபியின் அப்பா திட்டம் தீட்டுகிறார்.

அடுத்தபடியாக மேனேஜர் வந்து பாக்யாவிடம் எல்லோருக்கும் காபி கொடுக்க வேண்டும் என சொல்லிவிட்டு செல்ல பாக்யா காபியை தயார் செய்து செல்வியிடம் கொடுத்து அனுப்ப அவர் முதலில் கோபி ரூமுக்கு சென்று காபி வேண்டுமா என கேட்க வேண்டாம் என்று சொல்லிவிடுகிறார். பாக்யா அக்காவை அழ வச்சிட்டு நீங்க எது பண்ணாலும் நல்லா இருக்க மாட்டீங்க என செல்வி சொல்ல என்ன அவ தூதுவிட்டு அனுப்பினாளா என கேட்க அது எங்க அனுப்புச்சு அது பாட்டுக்கு சமையல் வேலையை பார்த்துகிட்டு இருக்கு என சொல்லிவிட்டு வெளியே வந்து விடுகிறார்.

பிறகு ராதிகா ரூமுக்கு சென்று காபி வேண்டுமா என கேட்க வேண்டாம் என்று சொல்லிவிடுகின்றனர். செல்வி ராதிகாவை நக்கலாக பேசிவிட்டு வெளியே சென்று விடுகிறார். அடுத்து பாக்கியா கீழே வரும்போது ராதிகாவை நேருக்கு நேராக பார்க்க அப்போது ராதிகா நாங்க நிம்மதியா இருக்கக் கூடாதுன்னு தானே இப்படி பண்றீங்களே கேட்கிறார்.

பாக்கியா திரும்பிச் சென்று என்ன பண்ணுவீங்க புரியல என கேட்க என் கல்யாணத்துல நிம்மதியா இருக்க கூடாதுன்னு தானே இப்படி பண்றீங்க என சொல்ல எனக்கு நிறைய வேலை இருக்கு நீங்க வேலை இல்லாம மேக்கப் போட்டுட்டு வந்து இப்படி பேசிட்டு இருக்கீங்க என்ன சொல்லி அங்கிருந்து கிளம்ப ரொம்ப பிர்லியண்ட் நீங்க என ராதிகா சொல்கிறார். முதல் முறையா என்ன இப்படி ஒரு வார்த்தை இல்லை ஒருத்தர் சொல்லி கேக்குற சந்தோஷமா இருக்கு நன்றி என கூறுகிறார்.

வசமாக சிக்கிய கோபி.. ராதிகா சொன்ன வார்த்தைக்கு பாக்யா கொடுத்த தரமான பதிலடி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்த கல்யாணத்தில் இருந்து கோபியை அழைச்சிட்டு போகத்தானே இங்க வந்தீங்க என சொல்ல யாருடைய வாழ்க்கையையும் கெடுக்கிற பழக்கமும் பறிக்கிற பழக்கமும் எனக்கு இல்லை என பாக்யா பதிலடி கொடுக்கிறார். நான் யாருடைய வாழ்க்கையும் பறிக்கல சட்டப்படிதான் கல்யாணம் பண்றேன் என ராதிகா சொல்ல அப்புறம் எதுக்கு வந்து விளக்கம் கொடுத்துட்டு இருக்கீங்க. உங்களுக்கு எதுவும் குற்ற உணர்ச்சி இல்லாமல் சட்டப்படிதானே பண்றீங்க என சொல்லிவிட்டு பாக்யா அங்கிருந்து நகர்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.