
இனியா எடுத்த முடிவால் கோபி ராதிகாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி இந்தியாவின் கையை பிடித்துக் கொண்டு வீட்டுக்கு போகலாம் என சொல்லி கூப்பிட இனிய கோபியின் கையை உதறி தள்ளி பாக்யாவின் கையை பிடிக்க இதை பார்த்து கோபி அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் இனியா நான் அம்மாவோட போறேன் என சொல்ல கோபி உனக்கு அப்பா தானே உயிர், என்கூட வந்துடு நான் உன்ன நல்லா பாத்துக்குறேன் என சொல்ல சாரி டாடி நான் இனிமேல் அந்த வீட்டுக்கு வர மாட்டேன் என சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதன் பிறகு இனியாவை டிஸ்சார்ஜ் செய்து வெளியே அழைத்து வர திரும்பவும் கோபி தன்னுடன் வந்துடு என அழைக்க பாய் டாடி என சொல்லி விட்டு நகர கோபி கண்ணீருடன் நிற்கிறார். ராதிகா அவங்க எல்லாரும் ஒண்ணு, நீங்கதான் தனி ஆள், இனியா உங்களை எப்படி தூக்கி போட்டு போறா பாருங்க என சொல்லி ஏத்தி விடுகிறார்.
அடுத்து இனியா வீட்டுக்கு வர அவளை ஆர்த்தி எடுத்து அழைத்துச் சென்று ஆளாளுக்கு அறிவுரை சொல்கின்றனர். அடுத்து எல்லோரும் இனியாவுடன் வீட்டில் சந்தோஷமாக இருக்க மறுபக்கம் கோபி வருத்தமாக உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

ராதிகா கோபியை சமாதானம் செய்ய பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என நினைக்கிறீங்களா என்று ராதிகா கேட்க கோபி நீ இன்னும் கொஞ்சம் சாஃப்டா டீல் பண்ணி இருக்கலாம் என சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார்.
அடுத்து வீட்டுக்கு வரும் ராமமூர்த்தி இனியா மற்றும் அவரது துணிகளை எடுத்துக் கொண்டு கிளம்ப கோபி நீங்களாவது என் கூட இருங்க நீங்க இங்க இருந்தா இனியா இங்க வருவா என சொல்ல இனியாவே இந்த வீட்ல இல்ல அவளுக்காக தான் நான் இங்கே இருந்தேன். இனி நான் எதுக்கு இருக்கணும் என சொல்லி கிளம்பி செல்கிறார்.

அடுத்து பாக்கியா இனியா, எழில், அமிர்தா மற்றும் ஜெனி என நால்வருக்கும் சாப்பாடு ஊட்டி விட மறுபக்கம் கோபி ஒயின் ஷாப்பில் ஹாஸ்பிடலில் நடந்த விஷயங்களை நினைத்து சரக்கு அடிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.