கோபி செய்த வேலையால் ராதிகா கோபமாக இனியா கடுப்பாகி உள்ளார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆயிடுச்சி தானே அப்போ நான் எதுக்கு உங்களை அங்கிள்-னு கூப்பிடனும் டாடி என்று கூப்பிடவா என மயூரா கேட்க கோபி கூப்பிடுறா, நான் அதுக்காகத்தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன் என சொல்ல டாடி என கூப்பிட கோபி எமோஷன் ஆகிறார். பின்னர் இரவு நேரத்தில் ராதிகா மயூ என இருவரும் தூங்கிய பிறகு கோபி இனியாவை நினைத்து கண்கலங்கி கொண்டிருக்கிறார்.

அடுத்த ஆப்பு ரெடி.. கோபி செய்த வேலையால் கோபமான ராதிகா, கடுப்பான இனியா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

தூக்கத்திலிருந்து எழும் ராதிகா என்னாச்சு என கேட்க இனியாவின் ஞாபகம் வந்துவிட்டதாக சொல்லி கோபி அழுகிறார். ஒருவேளை இனியா என்ன புரிஞ்சுகிட்டு என்கிட்ட வந்துட்டா அவளை நீ நல்லபடியா பார்த்துப்பியா என கேட்க ராதிகா கண்டிப்பா பார்த்துப்பேன் என கூறுகிறார். மறுநாள் காலையில் இன்னைக்கு பேரண்ட்ஸ் டீச்சர் மீட்டிங் இருக்கு ரெண்டு பேரும் ஸ்கூலுக்கு போயிட்டு வந்துடலாம் என சொல்ல கோபி நான் வரவில்லை அங்கு இனியாவும் இருப்பா அவ கஷ்டப்படுவா என சொல்ல நீங்க இனியாவை மட்டும்தான் நினைக்கிறீங்க என சத்தம் போடுகிறார் ராதிகா. இதனால் வேற வழி இல்லாமல் கோபி கூட வருவதாக ஒப்புக்கொள்கிறார்.

இந்தப் பக்கம் பாக்கியா இனியாவுக்கு ஏற்ற மாதிரி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என கண்ணாடியை பார்த்து பேசி பழக அப்போது இனியா வந்து போகலாம் என சொல்லி இருவரும் கிளம்ப பாக்கியா பைக்கில் போகலாம் என சொல்லி ஸ்கூட்டியை எடுக்கிறார். இந்த நேரத்தில் கோபி ராதிகா மயூ என எல்லோரும் வீட்டில் இருந்து வெளியே வர இனியா ஏறும்போது ஸ்கூட்டி சாய்வது போல தெரிய கோபி பதறுகிறார். பின்னர் இருவரும் ஸ்கூட்டியில் கிளம்பியதும் கோபி இடியட் இடியட் எவ்வளவு நாளா வண்டி ஓட்டுறா, இன்னும் ஹேண்டில் பண்ண தெரியல என பாக்யாவை திட்ட ராதிகா முறைத்து பார்க்க கோபி பயத்தில் சமாளிக்கிறார்.

அடுத்த ஆப்பு ரெடி.. கோபி செய்த வேலையால் கோபமான ராதிகா, கடுப்பான இனியா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அடுத்து ஸ்கூலில் பாக்கியா மற்றும் இனியா என இருவரும் மீட்டிங்க்காக காத்துக் கொண்டிருக்க அப்போது அங்கிருந்தவர் இனியா அப்பா வரலையா என கேட்க பாக்யா அவர் வரலை என சொல்லி சமாளிக்கிறார். இந்த நேரத்தில் கோபி ராதிகா மயூவுடன் ஸ்கூலுக்குள் வர அப்போது இனியாவின் தோழி உங்க அப்பா வராரு என சொல்ல இனியா அதிர்ச்சியாகிறார். பின்னர் கோபி இனியாவை பார்த்து நின்றுவிட இதை பார்க்கும் ராதிகா முகம் மாறுகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.