
பாக்கியா மாஸ் காட்ட குடி போதையில் வீட்டுக்கு வந்த கோபிக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போக உள்ள விஷயத்தை வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அனைவரும் ஆச்சரியமும் சந்தோஷமும் அடைகின்றனர்.

அதன் பிறகு பாக்யா கேன்டீன் விஷயத்துக்காக சில பொருட்களை ஆர்டர் செய்திருக்க இந்த பொருட்கள் வீட்டுக்கு வர வண்டியை நிறுத்தி பொருட்களை எடுக்க செழியனின் காரை கொஞ்சம் எடுக்கச் சொல்கின்றனர். எழில் காரை எடுத்து ஓரமாக விடுவதற்காக உள்ளே சென்று சாவி எடுத்து வர பாக்கியா நானே காரை உள்ளே விடுகிறேன் என சொல்லி ஸ்டைல் ஆக காருக்குள் ஏறி காரை உள்ளே எடுத்து விடுகிறார். இதைப் பார்த்து கோபி பாக்கியாவா இது என வாயடைத்து போகிறார்.

அதன் பிறகு பாக்கியா ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் போவதற்காக நோட்டு புத்தகத்திற்கு அட்டை போட்டு லேபிள் ஒட்டி தன்னுடைய பெயரை எழுதி அழகு பார்க்கிறார். மறுபக்கம் கோபி தன்னுடைய நண்பன் செந்திலுடன் உட்கார்ந்து சரக்கு அடித்து பாக்யாவின் வளர்ச்சி பற்றி பொறாமையில் பொங்குகிறார்.
அடுத்து கோபி குடிபோதையில் வீட்டுக்கு வந்து கதவை தட்ட மயூ கதவைத் திறக்க பிறகு கோபி குடிபோதையில் இருப்பதை பார்த்து அவருடைய அப்பா திட்டித் தீர்க்கிறார். பிறகு ராதிகா கோபியை ரூமுக்குள் அழைத்துச் சென்று படுக்க வைத்து விட்டு வெளியே வர இனியா எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், அந்த வீட்டில் இருக்கிற வரைக்கும் எங்கப்பா குடிச்சது கிடையாது என சண்டையிட ராதிகா நானா அவர குடிக்க சொன்னேன் என சத்தம் போடுகிறார்.

பிறகு ராமமூர்த்தி நான் உன்ன காரணம் சொல்ல வரல ஆனா அந்த வீட்ல இருக்கிற வரைக்கும் இவனை அப்படி பார்த்ததே இல்லை என சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோடு முடிவடைகிறது.