பாக்யாவை புது பிரச்சனையில் சிக்க வைத்துள்ளார் செல்வி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் கோபி என் பொண்ணு இங்க தான் இருக்கணும் என் கூட இந்த வீட்ல தான் இருக்கணும் அவள நாங்க விடமாட்டேன் என கோபி ராதிகாவிடம் சத்தம் போட்டுக் கொண்டிருக்கிறார்.

கோபிக்கு வந்த ஆப்பு.. பாக்யாவை புது பிரச்சனையில் சிக்க வைக்க செல்வி‌‌ - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

இந்த பக்கம் இனி தாத்தா போகலாமா என சொல்லி பாக்யா பாட்டி என யாரிடமும் எதுவும் சொல்லாமல் எழிலிடம் மட்டும் நான் வரேன் அண்ணா என்ன சொல்லி அங்கிருந்து கிளம்ப பாக்யா, ஈஸ்வரி கண்கலங்கி அழுகின்றனர். எழில் இருவரையும் சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார்.

அடுத்து இனியா வீட்டுக்கு வந்ததும் கோபி எங்கடா போயிட்ட நான் ஒரு நிமிஷம் பாத்துட்டு நீ அந்த வீட்டுக்கு போய் திரும்பி வரமாட்டேன் என்று நினைத்தேன் என சொல்ல அது எப்படி தாடி இங்க வராமல் இருப்பேன் என இனியா கூறுகிறார். ராதிகா கோபியை முறைத்து பார்க்க கோபி என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்.

அடுத்து அசோசியேஷன் மீட்டிங் தேர்தலுக்காக கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மக்கள் அசோசியேட் தலைவர் இதுவரை எதுவும் செய்யவில்லை என குற்றம் சொல்ல அவர் என்ன செய்யணும்னு நினைக்கிறீங்க நான் என்ன இது பண்ண மெக்கானிக்க அதை நான் எப்படி பண்ண முடியும் என ஒவ்வொன்றுக்கும் கவுண்டர் கொடுக்க கடைசியில் இந்த முறை நீங்க ஜெயிக்க முடியாது நாங்க பெண்களில் ஒரு தர நிறுத்துறோம் என சொல்லி கடைசியில் பாக்கியாவை கை காட்டுகின்றனர். குறிப்பாக செல்வி தான் பாக்கியாவை இந்த விஷயத்தில் கோர்த்துவிடுகிறார்.

கோபிக்கு வந்த ஆப்பு.. பாக்யாவை புது பிரச்சனையில் சிக்க வைக்க செல்வி‌‌ - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்.!!

அடுத்து எல்லோரும் பாக்யாவுக்கு ஆதரவாக இருக்க பாக்யா நான் நிற்கலாம் என சொல்லிக் கொண்டிருக்க அசோசியேட் தலைவர் 19 வருஷமா இந்த தலைவர் பதவியில இருக்கேன். இந்த வருஷம் பெண்களே நிற்கட்டும் நான் என் பொண்டாட்டிய நிக்க வச்சு ஜெயிச்சு காட்டுறேன் என சவால் விடுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.