கோபிக்கும் ராதிகாவுக்கும் கல்யாணம் செய்து வைக்க ராதிகாவின் குடும்பத்தார் முடிவு செய்துள்ளனர்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ராதிகாவின் அம்மாவும் அண்ணனும் கோபியை கல்யாணம் பண்ணிக்கோ என சொல்ல இப்போதைக்கு கோபி மேல இருக்கிறது வெறும் பரிதாபம்தான். கல்யாண பத்தி எல்லாம் பேசாதீங்க என சொல்லி உள்ளே எழுந்து சென்றுவிட பிறகு இதை இப்படித்தான் சொல்லிக்கிட்டே இருப்பா ஆனா அவ அடி மனசுல கோபி மேல ஒரு பெரிய ஆசை இருக்கு. நீ நடக்க வேண்டிய வேலையை பாரு அவளை எப்படி சம்மதிக்க வைக்கணும்னு தெரியும் என ராதிகாவின் அம்மா கூறுகிறார்.

கோபிக்கும் ராதிகாவுக்கும் கல்யாணம்... இனியாவால் எழிலை கண்டபடி திட்டிய ஈஸ்வரி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் பாக்கியா எழிலுக்காக காத்துக் கொண்டிருக்க பிறகு ஏன் வந்ததும் உடலாக இருக்க என்னாச்சு ஆறுதல் கூறுகிறார். பட விஷயத்தில் உனக்கு எது சரின்னு தோணுதோ அதை செய் என நம்பிக்கை கொடுக்கிறார். அடுத்ததாக ராதிகாவின் அண்ணா கோபியை சந்தித்து கல்யாணம் குறித்து பேச உன் தங்கச்சிக்காகத்தான் எல்லாத்தையும் இழந்து இப்படி அனாதையாக நிற்கிறேன். ராதிகா ஓகே சொன்னா நான் கல்யாணத்துக்கு ரெடி என கூறுகிறார். நீங்க கவலைப்படாதீங்க ராதிகாவை சம்மதிக்க வைக்க வேண்டியது என்னுடைய பொறுப்பு என சொல்லி அங்கிருந்து கிளம்புகிறார்.

கோபிக்கும் ராதிகாவுக்கும் கல்யாணம்... இனியாவால் எழிலை கண்டபடி திட்டிய ஈஸ்வரி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

வீட்டில் பாக்யா கோபியின் ஞாபகமாகவே இருக்க தூக்கம் வராமல் தவிக்க மறுநாள் காலையில் இனியா அப்பா இருந்தா கார்ல கூட்டிட்டு போய் விட்டு வருவாரு இப்போ பஸ்ல போனா என் பிரெண்ட்ஸ் எல்லாம் என்ன நினைப்பாங்க என பாக்யாவிடம் சண்டையிட எழில் இனியாவை திட்ட ஈஸ்வரி என்ன குரல் உசருது. நீ அவளுக்கு அண்ணன் மட்டும்தான் அதை மனசுல வச்சுட்டு பேசு. அவ சின்ன பொண்ணு போக போக எல்லாத்தையும் அவளே புரிஞ்சுப்பா என கூறுகிறார். இப்பதான் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.