விவாகரத்துக் கொடுக்க பாக்கியா தயாராகியுள்ள நிலையில் குடும்பத்தார் கோரிக்கை வைத்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் பாக்கியா கோர்ட்டில் இருந்து வந்த நோட்டீசை எடுத்துக் கொண்டு உள்ளே வர என்ன இது என கேட்க கோர்ட்டில் இருந்து வந்தது இன்னைக்கு கோர்ட்டுக்கு போகணும்ல என கூறுகிறார். அதெல்லாம் ஒன்னும் போகத் தேவையில்லை என ஈஸ்வரி சொல்கிறார். மேலும் அந்த நோட்டீசை கிழித்து போட சொல்கிறார்.

விவாகரத்து கொடுக்க தயாரான பாக்கியா.. குடும்பத்தார் வைத்த கோரிக்கை, கோபி சொன்ன வார்த்தை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

செழியன் இனியா என எல்லோரும் அதெல்லாம் ஒன்றும் போக வேண்டாம் அதுக்கு போகணும்னு அவசியம் இல்லை என கூறுகின்றனர். இல்ல அத்தை அவர் கேட்டார் இல்ல ஆசைப்பட்டு கேட்டது செய்யறது தானே பொண்டாட்டியோட வேலை. அவர் ஆசைப்பட்டு கேட்டது கொடுக்கணும் இல்ல என கூறுகிறார். கோபி எல்லாத்தையும் மறந்துட்டு இந்த வாழ்க்கையில வாழ்வேனு உன்கிட்ட சொன்னான் தானே. உன் கிட்ட வந்து செஞ்சி தப்புக்கு மன்னிப்பு கேட்டான் தானே என ஈஸ்வரி கேட்க பாக்யா மன்னிப்பு கேட்டீங்களா என கோபி பாட்டு கேட்க கோபி பேசாமல் நிற்கிறார்.

அதன் பிறகு செழியன் நீங்க என்னமா சீரியல் சினிமால வர பஞ்ச் டயலாக் மாதிரி பேசிட்டு இருக்கீங்க என சொல்ல வாழ்க்கையில் உன்னை விட அதிக அனுபவம் எனக்கு இருக்கு இத பத்தி நான் பேசுகிறேன் நீ அமைதியா இரு என கூறுகிறார். பிறகு தன்னுடைய மாமனார் இடம் நான் உங்களை எனக்கும் மாமனாரை பார்த்ததில்லை என்னுடைய அப்பாவை தான் பார்க்கிறேன். நான் மரியாதையோடு வாழனும்னு நினைக்கிறேன். இனி சகிச்சுக்கிட்டு இந்த வாழ்க்கை வாழறதுக்கு செத்துப் போகலாம். என்னுடைய முடிவு அல்ல நீங்க குறுக்க நிக்க மாட்டேங்குது நான் நம்புகிறேன் என கூறுகிறார். நான் என்னுடைய பிள்ளைகளுக்காக வாழனும்னு நினைக்கிறேன் என சொல்கிறார்.

விவாகரத்து கொடுக்க தயாரான பாக்கியா.. குடும்பத்தார் வைத்த கோரிக்கை, கோபி சொன்ன வார்த்தை - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோடு அப்டேட்

ஈஸ்வரி இனி அவ எந்த தப்பும் பண்ண மாட்டான் என சொல்கிறார். நீ பிடிவாதமா இருந்தா நான் உன்கிட்ட பேசமாட்டேன் என சொல்ல பிடிக்காத வாழ்க்கையில அவர் இருக்க சொல்லி ஏன் கட்டாயப்படுத்துறீங்க.? என பாக்கியா கேட்கிறார். பத்து மணிக்கு தானே கோர்ட்ல இருக்கணும் எழில் இப்பொழுது கிளம்பினால் சரியா இருக்குமா என பாக்கியா கேட்கிறார்.

அதன் பிறகு கோபி என்ன திமிர் காட்டுறியா? பழிக்கு பழியா என கேட்கிறார். அதெல்லாம் இல்லை இந்த பிடிக்காத வாழ்க்கையில் இருந்து விலகலாம் என முடிவெடுத்து இருக்கேன் என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.