கோபியை கொல்ல பாய்ந்துள்ளார் அவரது அப்பா.

Baakiyalakshmi Episode Update 02.04.22 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் நமது அவை கூட்டிக்கொண்டு கிண்டல் நடித்தவர் யார் என்ன காட்டுங்க என் பைக்கில் சென்றார் எழில். வேண்டாம் வேண்டாம் என சொல்ல அதனை கேட்காத எழில் யார் என ஆளை காட்டியதும் அவரை அடிக்கப் பாய்ந்தார். அவர்களுடன் கடுமையாக சண்டையிட்டு அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்க வைத்தார்.

கோபியை கொல்ல பாய்ந்த அப்பா.. பாக்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இனியா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

மேலும் அந்த ரவுடி நீ யாருடா என கேட்க நான் இவங்களோட ஹாஸ்பண்ட் புரியலையா அவளோட புருசன் எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒன்றரை வயசுல குழந்தை இருக்கு. இவங்ககிட்ட கிண்டல் பண்ணுது மட்டுமில்லாம தட்டிக் கேட்க வந்த அப்பாவை தள்ளி விடுவீங்களா இனிமே உங்களால ஏதாவது பிரச்சனை வந்துருச்சு சும்மா இருக்க மாட்டேன் என மிரட்டி விட்டு வருகிறார். எழில் சொன்ன வார்த்தையால் அதிர்ச்சி அடைகிறார் அமிர்தா.

பிறகு வீட்டுக்கு வந்த அவர் ஏன் என்கிட்ட எதுவும் சொல்ல மாட்டீங்க அப்ப நீங்க பையன் பையன் சொல்வதெல்லாம் வெறும் பேச்சுக்குத்தான் என அமிர்தாவின் அப்பா அம்மாவிடம் பேசுகிறார். உங்களுக்காக நான் இருக்கேன் இனிமே அவன் நம்ம வீட்டுப் பக்கமே வரமாட்டான் என்று சொல்கிறார். பிறகு அமிர்தா கனேஷ் போட்டோ பக்கத்தில் நின்று கொண்டு நான் இப்போ என்ன செய்யுறது? ‌‌ அவர் என் கிட்ட காதலை சொல்லும்போது எனக்கு எதுவும் தோணல. அவர் இங்க வந்துட்டு போகும்போது கூட எனக்கு எதுவும் தோணல. ஆனா இப்போ என்னை மீறி அவரை பிடிச்சிருக்கு, நான் என்ன செய்யறது நீங்களே சொல்லுங்க கூறுகிறார்.

இந்த பக்கம் கோபி சோபாவில் உட்கார்ந்து போன் பேசிக் கொண்டிருக்க அந்த நேரத்தில் அவருடைய அப்பா எழுந்து வந்து கழுத்தை பிடிக்கிறார். மிரண்டுபோன கோபி அவரிடமிருந்து தப்பி பயந்து ஓடி விடுகிறார். உன்னை சும்மா விடமாட்டேன் என மிரட்டுகிறார் அவருடைய அப்பா.

அதன் பின்னர் பாக்கியா இனியா ரூமுக்கு சென்று போனை எடுத்து வைத்து என சொல்ல அஞ்சு நிமிஷம் என கூறுகிறார் இனியா. மேலும் இனியா நான் படிச்சு முடிச்சுட்டு வெளிநாடு போயிட்டு போயிட்டு உள்ள இல்லாம ஜாலியா இருப்பேன் என சொல்கிறார். நான் உன் கூட வந்து விடுவேன் நீ தனியா எப்படி இருப்ப, பயமா இருக்காதா என சொல்ல நான் பாடிய கூட்டிட்டு போய் விடுவேன் நீ வேண்டாம். ரெண்டு பேரும் எப்படி சாப்பிடுவீங்க எனக் கேட்க ஹோட்டல்ல சாப்பிடுவோம், நாங்களே சமைச்சிப்போம் என கூறுகிறார். அம்மாவை பார்க்கனும்னு உனக்கு தோணவே தோணாது எனக்கேட்க அதான் அப்பப்ப வந்து போகிறேன்ல என கூறுகிறார். இதைக் கேட்டு பாக்கியா கோபமாக இருக்க அந்த நேரத்தில் இனியா என் பிரண்டோட அப்பா அம்மா விவாகரத்து வாங்கிட்டாங்க என சொல்ல இப்போ அவர் யாருடைய இருக்கா என பாக்யா கேட்கிறார். அவ அவங்க அப்பாவோட இருக்கா அம்மா கூட யார் இருப்பா?அவங்களும் உன்ன மாதிரிதான் என சொல்கிறார். நீயும் அப்பாவும் டைவர்ஸ் பண்ணா நானும் அப்பா கூடத்தான் இருப்பேன் என கூறுகிறார். இதனால் பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

கோபியை கொல்ல பாய்ந்த அப்பா.. பாக்யாவுக்கு அதிர்ச்சி கொடுத்த இனியா - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

அதன் பின்னர் வெளியான புரோமோ வீடியோவில் எழில் தன்னுடைய படவேலைகள் மொத்தமாக முடிந்தது, நாளை ப்ரிவீயூ ஷோ என சொல்கிறார். பாக்கியா அப்பாவைக் கூப்பிடு என அனுப்பி வைக்க மேலே வந்த எழில் தன்னுடைய அப்பாவிடம் விஷயத்தை சொல்ல அவர் வாழ்த்துக் கூறுகிறார். பிறகு கண் கலங்கி கொண்டே தயவுசெய்து நீங்க வந்துடாதீங்க என எழில் சொல்கிறார். ‌‌