காதலை சொன்ன எழிலை பார்த்து அமைந்த கேட்ட கேள்விகளால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

Baakiyalakshmi Episode Update 01.12.21 : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. வீட்டில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரத்தில் எழிலின் நண்பர் சதீஷ் வீட்டிற்கு வருகிறார். பிறகு அவரை உள்ளே அழைத்து பாக்கியா அமிர்தாவின் குடும்பத்தாரிடம் எழில் ஓட நண்பன் சதீஷ் என அறிமுகம் செய்து வைக்கிறார். பிறகு இவங்க அமிர்தாவோட அம்மா அப்பா என பாக்கியா சொல்ல நினைச்சேன் என கூறுகிறார்.

சஸ்பெண்ட் விவகாரம் : நாடாளுமன்றத்தில் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்..

காதலை சொன்ன எழில்.. அமிர்தா கேட்ட கேள்விகள்.. கடும் அதிர்ச்சியில் எழில் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பிறகு எழிலைப் புகழ்ந்த அமிர்தாவின் குடும்பத்தார் ஒரு நாள் கண்டிப்பா நீங்க எல்லாரும் குடும்பத்தோட எங்க சொந்த ஊருக்கு வரணும் என்று கூறுகிறார். அதன்பிறகு ஈஸ்வரி எங்க எங்க சொந்த ஊருக்கே போக முடியல. செழியனோட கல்யாணத்துக்கு போனது. அவனுக்கு காதல் திருமணம். வேறு மதம் வேறு ஜாதி. அதனால யாருக்கும் சொல்ல முடியல. நாங்களே போயிட்டு சீக்கிரமா முடிச்சுட்டு வந்துட்டோம் என்று கூறுகிறார். ஆனா ஜெனி ரொம்ப நல்ல பொண்ணு எல்லார் கூடவும் ஒட்டிக்கிட்டா என பாக்யா கூறுகிறார். உடனே பாக்யாவின் மாமனார் நாங்க பார்த்து கட்டி வைத்திருந்தா கூட இப்படி ஒரு பொண்ணு கிடைத்து இருக்காது என சொல்கிறார்.

ஆனா எழிலுக்கு எனக்கு புடிச்ச பொண்ணு தான் கட்டி வைப்போம். அதுல எந்த மாற்றமும் இல்லை என சொல்கிறார். உடனே ஈஸ்வரியின் கணவர் மொதல்ல அவன் படத்தை எடுத்து முடிக்க வேண்டும் என கூறுகிறார். எப்போ நாளும் எனக்கு புடிச்ச பொண்ணு தான் கட்டி வைப்பேன் என கூறுகிறார். அதன் பிறகு இவர்கள் வீட்டிற்கு கிளம்ப வீட்டில் உள்ளவர்கள் எழில் எங்கே என கேட்கின்றனர். அவன் அமிர்தா அப்பா அம்மாவ விட்டுட்டு வர போயிருக்கான் பாக்கியா சொல்ல அவங்கள எழில் அப்பா அம்மானு சொல்றது எனக்கு புடிக்கல. அங்கிள் ஆன்ட்டி நு சொல்லலாம்ல. இல்லாத அவன் அவனோட பிரண்ட்ஸ் அப்பா அம்மா எல்லாரையும் அப்படித்தான் கூப்பிடுவேன் என பாக்கியா கூறுகிறார்.

இந்த நேரத்தில் கோபி வீட்டுக்கு வர இனியா இன்னைக்கு ஃபுல்லா உங்கள மிஸ் பண்ணேன் என கூறுகிறார். ஜெனி அக்கா வீட்ல இருந்து மரியம் ஆன்ட்டி வந்திருந்தாங்க. அப்புறம் அமிர்தா அக்கா வீட்டில் இருந்து வந்து இருந்தாங்க ஜாலியா போச்சு என சொல்கிறார். கோபி வீட்டில் உள்ளவர்களிடம் பேசிக்கொண்டிருக்க இவன் ஆபீஸுக்கு போனானா இல்லையா என்ற சந்தேகத்தில் குழம்பிப்போய் எழுந்துச் செல்கிறார் கோபியின் அப்பா.

Ajith ரசிகர்களுக்கு காத்திருக்கும் Surprise – Dhruv Vikram அடுத்த படம் இவருடனா? 

காதலை சொன்ன எழில்.. அமிர்தா கேட்ட கேள்விகள்.. கடும் அதிர்ச்சியில் எழில் - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இந்தப் பக்கம் அமிர்தாவின் வீட்டில் எல்லோரும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது அவருடைய அம்மா குழந்தைக்கு டிரஸ் மாத்திட்டு தூங்க வை என சொல்கிறார். பிறகு குழந்தையுடன் அமிர்தா உள்ளே சென்ற பிறகு குழந்தை பட்டன் ஒன்றை முழுங்கி விட்டதாக அமிர்தா அழுகிறார். உடனே வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் பதற எழில் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்கிறார். அமிர்தாவை அழாதீங்க, எதுவும் ஆகாது என சமாதானம் செய்கிறார். குழந்தையை பரிசோதனை செய்து தொண்டையில் சிக்கி இருந்த பட்டனை எடுத்த டாக்டர் குழந்தை இப்போது நலமுடன் இருப்பதாக கூறுகிறார்.

பிறகு இருவரும் குழந்தையை பார்க்க உள்ளே செல்ல நான் குழந்தையை டிஸ்டப் செய்ய வேண்டாம் என சொல்கிறார். அதன்பிறகு அமிர்தா எழிலின் கையைப் பிடித்துக்கொண்டு நன்றி கூறுகிறார். நீங்க இல்லனா நான் என்ன பண்ணி இருப்பேனோ தெரியாது. எல்லாமே நேரம் ஆகியிருக்கும் என சொல்ல எழில் அமிர்தாவின் கையைப் பிடித்து நான் எப்பவுமே உங்க கூட இருப்பேன். உங்க கூட மட்டும் இல்ல பாப்பா கூட அப்பா அம்மாவோட இருப்பேன் என சொல்கிறார். அமிர்தா சிரித்து விட்டு கையை எடுத்து விடுகிறார். மீண்டும் இதழில் அவரது கையைப் பிடித்து எப்பவும் நான் உங்களோட இருக்கணும்னு நினைக்கிறேன். இருக்க முடியுமா? இனியும் என்னால மறைக்க முடியும்னு தெரியல. உங்களோட சந்தோஷமா வாழணும்னு நினைக்கிறேன். ஐ லவ் யூ அமிர்தா என சொல்கிறார். உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் இத உங்க கிட்ட பலமுறை சொல்ல முயற்சி செய்தேன் ஆனால் அதற்கு வாய்ப்பே கிடைக்கவில்லை. இது சரியான நேரம் என்று எனக்கு தெரியல. நீங்க அழும் போது எனக்கு சொல்லணும்னு தோணுச்சு. அதான் சொல்லிட்டேன் என கூறுகிறார்.

இதனால் அதிர்ச்சியான அமிர்தா எல்லாரும் ஒரே மாதிரி தான் இருக்கீங்க. இதுக்குத்தான் எனக்கு உதவி பண்ணீங்களா? இதுக்குத்தான் எங்க அப்பா அம்மா கிட்ட பேசினீங்களா? என கேட்கிறார். இல்ல அம்மா இருக்கா அப்படி இல்லை என எழில் விளக்கம் சொல்ல எதுவும் சொல்லாதீங்க இனி எதுவும் சொல்லாதீங்க. யாரை நம்புறதுனு தெரியல என அமிர்தா அழுகிறார். இத்துடன் முடிகிறது இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட்.

இதைத் தொடர்ந்து வெளியான ப்ரோமோ வீடியோவில் அமிர்தாவையும் குழந்தையும் வீட்டில் விட்டுவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார் எழில்‌. வீட்டில் அவர் சோகமாக இருக்க பாக்கியா என்ன என்று கேட்கிறார். எழில் என்ன சொல்லப் போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ‌‌