கார் விபத்தில் சிக்கி கோபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேருக்கு நேராக சந்திக்க உள்ளனர் பாக்கியா மற்றும் ராதிகா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் இனியா பாக்யாவை அழைத்து வர அவர் சமைக்கும் இடத்திற்கு சென்று அப்பாவை பற்றி யாரோ வந்து ஏதோ சொல்லி சண்டை போட்டுட்டு போனாங்க என மொட்டையாக சொல்லி அவரை அழைத்து வருகிறார்.

கார் விபத்தில் சிக்கிய கோபி.. நேருக்கு நேராக சந்திக்க போகும் பாக்கியா, ராதிகா.. காத்திருக்கும் அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

இன்னொரு பக்கம் டென்ஷனில் கோபி வேகமாக வண்டி ஓட்டி வந்து மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகிறார். இதனையடுத்து கோபியை அக்கம் பக்கம் இருந்தவர்கள் காரில் இருந்து காப்பாற்றும் மருத்துவமனையில் அனுமதிக்க உங்களது வீட்டுக்கு தெரியப்படுத்த வேண்டும் நம்பரை சொல்லுங்க என கேட்க கோபி பாக்யாவின் நம்பரை கூறுகிறார். பிறகு பாக்யாவுக்கு போன் போட்டு விபத்துக்குள்ள அந்த விஷயத்தை சொல்ல அவர் இனியாவிடம் எதுவும் சொல்லாமல் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு நேராக ஹாஸ்பிடலுக்கு கிளம்பி செல்கிறார்.

இன்னொரு நர்ஸ் உங்க வீட்டில் வேற யாருக்காவது தெரியப்படுத்த வேண்டுமா என கேட்க ராதிகாவின் நம்பரை கூறுகிறார். பிறகு ராதிகாவுக்கும் விஷயம் தெரிந்து அவர் மருத்துவமனைக்கு முதலில் ஓடி வந்து கோபியை பார்க்கிறார். டாக்டர்கள் வெளியில் காத்திருக்க சொல்ல வெளியே வந்து விடுகிறார் ராதிகா. இந்த நேரத்தில் பாக்கியாவும் மருத்துவமனைக்குள் நுழைகிறார். இத்துடன் இன்றைய சீரியல் எபிசோடு முடிவடைகிறது.

கார் விபத்தில் சிக்கிய கோபி.. நேருக்கு நேராக சந்திக்க போகும் பாக்கியா, ராதிகா.. காத்திருக்கும் அதிர்ச்சி - பாக்கியலட்சுமி இன்றைய முழு எபிசோட் அப்டேட்

பாக்கியாவும் ராதிகாவும் நேருக்கு நேராக சந்தித்துக் கொள்வார்களா இருவருக்கும் விஷயம் தெரிய வருமா என்பதெல்லாம் அடுத்தடுத்த எபிசோடுகளில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.